Published:Updated:

என்.எல்.சி. ஒப்பந்த ஊழியர்கள் பணிநிரந்தரம்: உச்ச நீதிமன்றம் உத்தரவு!

புதுடெல்லி: என்.எல்.சி. ஒப்பந்த ஊழியர்களுக்கு பணி நிரந்தரம் செய்து சென்னை உயர் நீதிமன்றம் அளித்த தீர்ப்பை உச்ச நீதிமன்றம் உறுதி செய்து உத்தரவிட்டுள்ளது.

மத்திய அரசு நிறுவனமான நெய்வேலி என்.எல்.சி.யில் பணியாற்றும் ஒப்பந்த ஊழியர்கள் தங்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என்று தொடர்ந்து போராடி வருகின்றனர். இது தொடர்பாக தொடரப்பட்ட வழக்கை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம், என்.எல்.சி. ஒப்பந்த தொழிலாளர்களில் பணிமூப்பு அடிப்படையில் 10 ஆயிரத்து 372 பேரை பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என்று தீர்ப்பளித்தது.

இந்த தீர்ப்பை எதிர்த்து என்.எல்.சி. நிர்வாகம் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது.

##~~##
இந்த மனுவை விசாரித்த உச்ச நீதிமன்றம், சென்னை உயர் நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை இன்று உறுதி செய்து உத்தரவிட்டது. மேலும் 10 ஆயிரத்து 372 ஒப்பந்த தொழிலாளர்களையும் பணி நிரந்தரம் செய்ய நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் தனது உத்தரவில் நீதிமன்றம் குறிப்பிட்டுள்ளது.
 இந்த தீர்ப்பு குறித்து என்.எல்.சி. தொழிற்சங்கங்களும், ஒப்பந்த தொழிலாளர்களும் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர்.