Published:Updated:

திவாகரனுக்கு நீதிமன்றம் ஜாமீன்!

திவாகரனுக்கு நீதிமன்றம் ஜாமீன்!
திவாகரனுக்கு நீதிமன்றம் ஜாமீன்!
திவாகரனுக்கு நீதிமன்றம் ஜாமீன்!

திருச்சி: கொலை மிரட்டல் வழக்கில் சிறையில் அடைக்கப்பட்டிருந்த சசிகலாவின் சகோதரர் திவாகரனுக்கு நீதிமன்றம் ஜாமீன் வழங்கி உள்ளது.

திருவாரூர் மாவட்டம் நீடாமங்கலம் அடுத்த ரிஷியூர் கிராமத்தை சேர்ந்தவர் தமிழார்வன். முன்னாள் ஊராட்சி தலைவர். இவரை அதே ஊரை சேர்ந்த கிருஷ்ணமேனன், ராஜேந்திரன் வழிமறித்து அரிவாளால் வெட்டி கொல்ல முயன்றனர். இதுகுறித்து நீடாமங் கலம் போலீசில் அளித்த புகாரில் திவாகரனின் தூண்டுதலின்பேரில் தன்னை 2 பேர் அரிவாளால் வெட்டி கொல்ல முயன்றதாக கூறியிருந்தார்.

அதன்பேரில் திருவாரூர் குற்றப்பிரிவு டி.எஸ்.பி குணசேகரன் மற்றும் போலீசார் கடந்த மார்ச் மாதம் 23 ஆம் தேதியன்று இரவு திவாகரனை கைது செய்தனர். மேலும் கிருஷ்ணமேனன், ராஜேந்திரன் ஆகியோரை ரிஷியூரில் கைது செய்தனர். பின்னர் 3 பேரும் நீடாமங்கலத்தில் மாஜிஸ்திரேட் நீதிபதி

##~~##
முருகன் முன் ஆஜர்படுத்தப்பட்டனர். அவர்களை நீதிமன்ற காவலில் வைக்க  மாஜிஸ்திரேட்  உத்தரவிட்டார்.
இந்நிலையில் திவாகரனுக்கு திருவாரூர் மாவட்ட நீதிமன்றம் செவ்வாய்க்கிழமையன்று ஜாமீன் வழங்கி உத்தரவிட்டது. அவர தினமும் காவல் நிலையத்தில் ஆஜராகி கையெழுத்திட வேண்டும் என்றும் நிபந்தனை விதிக்கப்பட்டுள்ளது.