Published:Updated:

தூத்துக்குடி அனல்மின் நிலையத்தில் மீ்ண்டும் மின் உற்பத்தி!

தூத்துக்குடி அனல்மின் நிலையத்தில் மீ்ண்டும் மின் உற்பத்தி!
தூத்துக்குடி அனல்மின் நிலையத்தில் மீ்ண்டும் மின் உற்பத்தி!

சென்னை: தூத்துக்குடி அனல்மின் நிலையத்தில் மீண்டும் மின் உற்பத்தி தொடங்கியுள்ளது. இதனால் மின் தடை குறைய சற்று வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.
 

தூத்துக்குடி அனல்மின் நிலையத்தில் மீ்ண்டும் மின் உற்பத்தி!

தூத்துக்குடி அனல் மின் நிலையத்தில் மொத்தம் 5 மின் உற்பத்தி யூனிட்டுகள் உள்ளன. இதில் ஒரு யூனிட்டில் மட்டும் 210 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்படுகிறது. அதன்படி மொத்தம் 1050 மெகாவாட் மின்சாரம் தினமும் உற்பத்தி செய்யப்பட்டு வந்தது.

இந்த நிலையில் கடந்த 15ஆம் தேதி திடீரென இரண்டு யூனிட்டுகளில் உள்ள பாய்லரில் ஓட்டை விழுந்ததைத் தொடர்ந்து அந்த யூனிட்டுகள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. இதனால் 420 மெகாவாட் மின்சார உற்பத்தி குறைந்தது.

##~~##
இதனிடையே, பாய்பலரில் விழுந்த ஓட்டை சரி செய்யப்பட்டு 3, 5வது யூனிட்டுகளில் உற்பத்தி இன்று தொடங்கியது. இதனால் 420 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது. இதனால் மின் தடை நேரம் சற்று குறைய வாய்ப்பு இருப்பதாக தெரிகிறது.