Published:Updated:

மதுரைக்கு ஐ.டி. பார்க், தொழிற்சாலைகள் கோரி இளைஞர்கள் பேரணி!

மதுரைக்கு ஐ.டி. பார்க்,  தொழிற்சாலைகள் கோரி இளைஞர்கள் பேரணி!
மதுரைக்கு ஐ.டி. பார்க், தொழிற்சாலைகள் கோரி இளைஞர்கள் பேரணி!

மதுரை: பொறியியல், கலை அறிவியல் கல்லூரிகள் நிறைந்த தென் மாவட்டங்களில் இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு வழங்கும் வகையில் கனரக தொழிற்சாலைகளை தொடங்கவும், ஐ.டி. பார்க்குகளை உடனே செயல்படுத்த வலியுறுத்தியும் இளைஞர்கள் மதுரையில் இன்று பேரணி நடத்தினர்.

மதுரைக்கு ஐ.டி. பார்க்,  தொழிற்சாலைகள் கோரி இளைஞர்கள் பேரணி!

மதுரையில் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் சார்பில் நடந்த இந்த பேரணிக்கு மாவட்ட தலைவர் லெனின் தலைமை தாங்கினார். மாநில தலைவர் முத்துக்கண்ணன், மாநில துணை செயலாளர் வை.ஸ்டாலின், மாவட்ட செயலாளர் கோபிநாத், மாநில குழு உறுப்பினர் ஆர்.பாண்டி, மத்திய குழு உறுப்பினர் கல்பனா ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஆறுமுச்சந்தியில் இருந்து தொடங்கிய இந்த பேரணி, நகரின் முக்கிய வீதிகள் வழியாகச் சென்று மதுரை கலெக்டர் அலுவலகத்தை அடைந்தது.

மதுரைக்கு ஐ.டி. பார்க்,  தொழிற்சாலைகள் கோரி இளைஞர்கள் பேரணி!

பேரணியில் கலந்து கொண்ட இளைஞர்கள், "2008ம் ஆண்டு தொடங்கப்பட்ட மதுரை இலந்தைகுளம் மென்பொருள் பூங்காவை உடனே செயல்படுத்த வேண்டும். வடபழஞ்சி கிராமத்தில் மென்பொருள் பூங்கா தொடங்குவதற்காக‌ 239.58 ஏக்கர் நிலத்தை அரசு கையப்படுத்தியது. அங்கே உடனே ஐ.டி. பார்க் தொடங்க வேண்டும். தென்மாவட்ட தொழில் வளர்ச்சிக்கு உதவும் வகையில் மதுரை விமான நிலையத்தை சர்வதேச விமான நிலையமாக தரம் உயர்த்த வேண்டும். தொழில் முனைவோர்கள் விரும்புகிறபடி, தென் மாவட்டங்களில் அடிப்படைக் கட்டமைப்பு வசதிகளை அரசு செய்து கொடுக்க வேண்டும்" உள்ளிட்ட‌ கோரிக்கைகளை வலியுறுத்திப் பேசினார்கள்.

மதுரைக்கு ஐ.டி. பார்க்,  தொழிற்சாலைகள் கோரி இளைஞர்கள் பேரணி!

பேரணியின் முடிவில் சங்கத்தின் மாநில தலைவர் முத்துக்கண்ணன் கூறியதாவது, '' மதுரை உள்ளிட்ட தென் மாவட் டங்களில் பொறியியல் கல்லூரிகளும், கலைக்கல்லூரிகளும், தொழில்நுட்ப கல்லூரிகளும் ஏராளமாக உள்ளன. இங்கிருந்து ஆண்டுதோறும் பல்லாயிரக்கணக்கான மாணவர்கள் படித்துவிட்டு வெளியேறுகிறார்கள். ஆனால், படித்த இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு என்பது தென்மாவட்டங்களைப் பொருத்தவரை கேள்விக்குறியாகவே இருக்கிறது. இதனால் மதுரை உள்ளிட்ட தென்மாவட்ட இளைஞர்கள் வேலை தேடி சென்னை, பெங்களூரு, மும்பை, திருப்பூர் போன்ற நகரங்களை நோக்கி இடம் பெயர்கிறார்கள்.

சரியான வேலைவாய்ப்பு இல்லாததால் சாதிக்கலவரம் உள்ளிட்ட சமூக பதட்டங்களும் இந்தப் பகுதியில் அடிக்கடி ஏற்பட்டு வருகிறது. பல்வேறு நீதிபதிகள் மற்றும் சமுக ஆர்வலர்களின் ஆய்வு அறிக்கைகளும் இதையே சுட்டிக் காட்டுகின்றன. எனவே, எதற்கெடுத்தாலும் சென்னையைச் சுற்றியே தொழிற்சாலைகளை உருவாக்குவதை விட்டு விட்டு, தென்மாவட்டங்களிலும் தொழிற்சாலைகளைத் தொடங்கக் கோரி இந்த பேரணியை நடத்தி இருக்கிறோம்.

-கே.கே.மகேஷ்
படங்கள்:
எஸ்.கேசவசுதன்