Published:Updated:

போராட்டம் எதிரொலி: கோவை - பொள்ளாச்சி மைல்கற்களில் இந்தி எழுத்துகள் ஆங்கிலத்துக்கு மாற்றம்!

குருபிரசாத்
போராட்டம் எதிரொலி: கோவை - பொள்ளாச்சி மைல்கற்களில் இந்தி எழுத்துகள் ஆங்கிலத்துக்கு மாற்றம்!
போராட்டம் எதிரொலி: கோவை - பொள்ளாச்சி மைல்கற்களில் இந்தி எழுத்துகள் ஆங்கிலத்துக்கு மாற்றம்!

கோவை - பொள்ளாச்சி தேசிய நெடுஞ்சாலை மைல்கற்களில் இந்தி எழுத்துகளுக்கு எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டதையடுத்து, அவை ஆங்கிலத்தில் மாற்றப்பட்டுள்ளன.

கோவை – பொள்ளாச்சி தேசிய நெடுஞ்சாலையில் உள்ள மைல்கற்களில், ஊரின் பெயர்கள் தமிழுடன் இந்தியிலும் எழுதப்பட்டிருந்தன. குறிப்பாக, தமிழ் எழுத்துகளும் பிழையாக எழுதப்பட்டிருந்தது. இதையடுத்து, அதற்குக் கடும் கண்டனங்களும் எதிர்ப்புகளும் எழுந்தன. தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர், பொதுச்செயலாளர்  கு.ராமகிருஷ்ணன் தலைமையில் இந்தி எழுத்துகளைக் கறுப்பு மையால் அழித்துப் போராட்டம் நடத்தினர்.

"நாங்கள் இந்தியை வேண்டாமென்று சொல்லவில்லை. ஆனால், இந்தியை எங்களிடம் திணிக்காதீர்கள்" என்று மத்திய, மாநில அரசுகளுக்குக் கண்டனம் தெரிவிக்கப்பட்டிருந்தது. மேலும், இந்தி எழுத்துகளை முழுவதுமாக அழிக்காவிட்டால், தொடர்ந்து போராட்டம் நடத்தப்படும் என்றும் அறிவித்திருந்தனர். இந்தத் தொடர் போராட்டத்தின் எதிரொலியாக, கோவை - பொள்ளாச்சி தேசிய நெடுஞ்சாலையில் உள்ள இந்தி எழுத்துகள் அழிக்கப்பட்டு, அவற்றுக்குப் பதிலாக ஆங்கிலத்தில் ஊரின் பெயர்கள் எழுதப்பட்டுள்ளன. இதனால், தமிழ் ஆர்வலர்களும் பொதுமக்களும் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.