Published:Updated:

தினத்தந்தி அதிபர் சிவந்தி ஆதித்தன் காலமானார்

தினத்தந்தி அதிபர் சிவந்தி ஆதித்தன் காலமானார்
தினத்தந்தி அதிபர் சிவந்தி ஆதித்தன் காலமானார்
தினத்தந்தி அதிபர் சிவந்தி ஆதித்தன் காலமானார்

சென்னை:  பிரபல தினத்தந்தி நாளிதழின் அதிபர் சிவந்தி ஆதித்தன் வெள்ளிக்கிழமையன்று இரவு காலமானார். 

கடந்த சில வாரங்களாக உடல் நலம் பாதிக்கப்பட்டு சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த சிவந்தி ஆதித்தனை, முதலமைச்சர் ஜெயலலிதா அண்மையில் மருத்துவமனைக்கு நேரில் சென்று பார்த்து உடல் நலம் விசாரித்தார். 

இந்நிலையில் சிகிச்சை பலனளிக்காமல் சிவந்தி ஆதித்தன் வெள்ளிக்கிழமையன்று இரவு காலமானார். 

அவரது மறைவுக்கு பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களும், அமைப்புகளும் ஆழ்ந்த இரங்கல் வெளியிட்டுள்ளனர்.