Published:Updated:

சிவந்தி ஆதித்தன் மறைவுக்கு பத்திரிகையாளர் மன்றம் இரங்கல்

சிவந்தி ஆதித்தன் மறைவுக்கு பத்திரிகையாளர் மன்றம் இரங்கல்
சிவந்தி ஆதித்தன் மறைவுக்கு பத்திரிகையாளர் மன்றம் இரங்கல்

சென்னை: தினத்தந்தி நாளிதழ் நிறுவனர் சிவந்தி ஆதித்தன் மறைவு பத்திரிகை உலகத்துக்கு ஈடு செய்ய முடியாத இழப்பு என்று பத்திரிகையாளர் மன்றம் இரங்கல் தெரிவித்துள்ளது.

##~~##
இது தொடர்பாக சென்னை பத்திரிகையாளர் மன்றத்தின் இணைச் செயலாளர் பாரதிதமிழன் வெளியிட்டுள்ள அறிக்கையில், "தினத்தந்தி நாளிதழ் குழுமத்தின் அதிபர் பத்மஸ்ரீ சிவந்தி ஆதித்தனாரின் மறைவு பத்திரிகை உலகத்துக்கு ஈடு செய்ய முடியாத இழப்பு. அன்னாரது மறைவுக்கு சென்னை பத்திரிகையாளர் மன்றம் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து கொள்கிறது.
பெரியவர் சிவந்தி ஆதித்தனாரை இழந்து வாடும் குடும்பத்தினர், தினத்தந்தி குழும ஊழியர்கள், ஊடக உலகத்தினர் அனைவரோடும் ஆழ்ந்த வருத்தத்தை சென்னை பத்திரிகையாளர் மன்றம் பகிர்ந்து கொள்கிறது" என்று தெரிவித்துள்ளார்.