Published:Updated:

பரமக்குடியில் ரூ.1 கோடி மதிப்புடைய போதை பொருள் சிக்கியது!

பரமக்குடியில் ரூ.1 கோடி மதிப்புடைய போதை பொருள் சிக்கியது!
பரமக்குடியில் ரூ.1 கோடி மதிப்புடைய போதை பொருள் சிக்கியது!

ராமநாதபுரம்: தூத்துக்குடியில் இருந்து பரமக்குடிக்கு கடத்தி வரப்பட்ட ரூ.1 கோடி மதிப்புடைய போதை பொருளை போலீசார் கைப்பற்றினர்.

தூத்துக்குடியில் இருந்து போதை பொருள் கடத்தி வரப்படுவதாக பரமக்குடி தாலுகா போலீஸ் இன்ஸ்பெக்டர் ரத்னகுமாருக்கு தகவல் வந்துள்ளது. இதையடுத்து நேற்று இரவு பரமக்குடிக்கு வந்த பேருந்துகளில் போலீஸார் சோதனை மேற்கொன்டனர்.

நள்ளிரவில் தூத்துக்குடியில் இருந்து பரமக்குடிக்கு வந்த பேருந்தில் சோதனையிட்ட போது, போதை பொருளான ஹெராயின் சிக்கியது. இதன் மதிப்பு ரூ.1 கோடி ஆகும்.

##~~##
இது தொடர்பாக சிவகங்கை மாவட்டம், மல்லாங்கோட்டை கிராமத்தை சேர்ந்த லோகேஷ்குமார் என்ற வாலிபரை கைது செய்தனர். அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில் பரமக்குடியை சேர்ந்த ஆனந்த் என்பவருக்கு போதை பொருளை கொண்டு வந்ததாக கூறியுள்ளார். இதையடுத்து ஆனந்த்தை போலீஸார் தேடி வருகின்றனர்.
-இரா.மோகன்