Published:Updated:

எண்ணூர் அனல்மின் நிலையத்தில் மின் உற்பத்தி அடியோடு பாதிப்பு!

எண்ணூர் அனல்மின் நிலையத்தில் மின் உற்பத்தி அடியோடு பாதிப்பு!
எண்ணூர் அனல்மின் நிலையத்தில் மின் உற்பத்தி அடியோடு பாதிப்பு!

சென்னை: சென்னையை அடுத்த எண்ணூர் அனல்மின் நிலையத்திலுள்ள அனைத்து யூனிட்டுகளும் இயங்காததால் மின்உற்பத்தி முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் சென்னையில் மின் வெட்டு அதிகரிக்க வாய்ப்புள்ளது.
 

எண்ணூர் அனல்மின் நிலையத்தில் மின் உற்பத்தி அடியோடு பாதிப்பு!

எண்ணூரில் உள்ள  அனல்மின் நிலையத்தில் 5 யூனிட்டுகள் மூலம் 460 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்படுகிறது. மொத்தம் 1200 தொழிலாளர்கள் வேலை செய்கிறார்கள்.

இந்த நிலையில் எண்ணூர் அனல்மின் நிலையத்தின் மிகவும் பழமையான 5வது யூனிட் கடந்த சில நாட்களாக இயங்கவில்லை. நேற்று முன்தினம் முதல் 2வது யூனிட்டும் இயங்கவில்லை.

மீதமுள்ள 1, 3, 4 ஆகிய யூனிட்டுகள் நேற்று முன்தினம் இரவு முதல் இயங்கவில்லை. இதனால் மின் உற்பத்தி முற்றிலும் முடங்கி உள்ளது.

இது குறித்து அதிகாரி ஒருவர் கூறுகையில், ''யூனிட்டுகள் பழுது பார்க்கும் பணிகள் தற்போது நடந்து வருகிறது. இன்று அல்லது நாளைக்குள் மீண்டும் மின்உற்பத்தி தொடங்கும்'' என்றார்.