Published:Updated:

திருச்சி அருகே ஆடுகளை கடித்து குதறிய நாய்கள்!

திருச்சி அருகே ஆடுகளை கடித்து குதறிய நாய்கள்!
திருச்சி அருகே ஆடுகளை கடித்து குதறிய நாய்கள்!

திருச்சி: திருச்சி அருகே 11 ஆடுகளை, நாய்கள் கடித்து, திண்ற சம்பவம் அப்பகுதி மக்களை பீதியில் ஆழ்த்தியுள்ளது.

திருச்சி அருகே ஆடுகளை கடித்து குதறிய நாய்கள்!

திருச்சி மாவட்டம், துறையூர் விநாயகர் தெருவைச் சேர்ந்தவர் மருதாயி. இவர் ஆடு வளர்க்கும் தொழில் செய்து வருகிறார். வீட்டிற்கு அருகிலேயே அந்த ஆடுகளை கட்டி வளர்த்து வந்தார்.

திருச்சி அருகே ஆடுகளை கடித்து குதறிய நாய்கள்!

இந்நிலையில் இன்று அதிகாலை, கட்டப்பட்டிருந்த ஆடுகளை பார்த்தபோது, இவரிடம் இருந்த 11 ஆடுகளையும் சுமார் 30க்கும் மேற்பட்ட தெரு நாய்கள் கடித்து குதறி, சாப்பிட்டு போட்டுவிட்டு சென்றிந்தது.

திருச்சி அருகே ஆடுகளை கடித்து குதறிய நாய்கள்!

துறையூர் நகராட்சியில் கடந்த இரண்டு வருடங்களுக்கும் மேலாக நூற்றுக்கும் மேற்பட்ட தெருநாய்கள் சுற்றிக்கொண்டு இருக்கின்றன. இந்த நாய்களால் கால்நடைகளும், பொதுமக்களும் அவ்வப்போது பாதிக்கப்பட்டு வருகின்றனர். இந்நிலையில் இன்று அதிகாலை நடந்த இந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் பீதியை ஏற்படுத்தியிருக்கிறது.

##~~##
துறையூர் நகராட்சி நிர்வாகம் இந்த தெருநாய்களை ஒழிப்பதற்கோ, கட்டுப்படுத்துவதற்கோ எந்தவொரு நடவடிக்கையும் இதுவரை எடுக்கவில்லை. இனிமேலாவது தெரு நாய்களை கட்டுப்படுத்த உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை வைக்கின்றனர்.
-அ.சாதிக் பாட்ஷா