Published:Updated:

மூடிய டாஸ்மாக் மீண்டும் திறப்பு: சர்வ கட்சியினர் ஆர்ப்பாட்டம்!

மூடிய டாஸ்மாக் மீண்டும் திறப்பு: சர்வ கட்சியினர் ஆர்ப்பாட்டம்!
மூடிய டாஸ்மாக் மீண்டும் திறப்பு: சர்வ கட்சியினர் ஆர்ப்பாட்டம்!

ராமநாதபுரம்: தங்கச்சிமடத்தில் மூடப்பட்ட இரண்டு டாஸ்மாக்கில், ஒரு கடையை மீண்டும் திறந்ததால் சர்வ கட்சியினர் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

மூடிய டாஸ்மாக் மீண்டும் திறப்பு: சர்வ கட்சியினர் ஆர்ப்பாட்டம்!

உயர் நீதிமன்ற ஆணையின்படி, ராமநாதபுரம் மாவட்டத்திலுள்ள தங்கச்சிமடத்தில் இயங்கி வந்த இரண்டு டாஸ்மாக் கடைகள் அடைக்கப்பட்டன. இதற்கிடையில் எந்தவித அறிவிப்புமின்றி கடந்த 19ஆம் தேதி இரவு 9.30 மணியளவில் ஒரு டாஸ்மாக் மட்டும் திறக்கப்பட்டு வியாபாரம் செய்தனர். இதனால் பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

மூடிய டாஸ்மாக் மீண்டும் திறப்பு: சர்வ கட்சியினர் ஆர்ப்பாட்டம்!

டாஸ்மாக் மீண்டும் திறந்ததை கண்டித்து 30-க்கும் மேற்பட்ட நாம் தமிழர் அமைப்பை சேர்ந்தவர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் போலீஸ் தடியடி நடத்தி 4 பேரை கைது செய்தனர். அதன் பிறகு கடையும் அடைக்கப்பட்டது.

##~~##
இந்நிலையில் மீண்டும் மறுநாள் (20ஆம் தேதி) கடை திறக்கப்பட்டது. இதனால் கோபமடைந்த சர்வ கட்சியினர் ஒன்று கூடி கைது செய்யப்பட்டவர்களை விடுதலை செய்யக்கோரியும், டாஸ்மாக் கடையை அகற்ற வேண்டியும் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
உ.பாண்டி