Published:Updated:

எஸ்.ஐ.க்கு பளார்: குடிமகனை காய்ச்சி எடுத்த போலீஸ்

எஸ்.ஐ.க்கு பளார்: குடிமகனை காய்ச்சி எடுத்த போலீஸ்
எஸ்.ஐ.க்கு பளார்: குடிமகனை காய்ச்சி எடுத்த போலீஸ்

பெரம்பலூர்: சப்-இன்ஸ்பெக்டர் சட்டையை பிடித்து கன்னத்தில் அறைந்த குடிமகனை காவல்துறையினர் அடித்து உதைத்த சம்பவம் பெரம்பலூர் மாவட்டத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

எஸ்.ஐ.க்கு பளார்: குடிமகனை காய்ச்சி எடுத்த போலீஸ்

பெரம்பலூர் மாவட்டம், வி.களத்தூர் காவல்நிலையத்தில் சப்-இன்ஸ்பெக்டராக பணிபுரிந்து வருபவர் மாரிமுத்து. இவர் மாலை நேரங்களில் வாகன சோதனையில் ஈடுபடுவது வழக்கம். அப்படித்தான் நேற்று மாலை 7 மணியளவில், சப்-இன்ஸ்பெக்டர் மாரிமுத்துவும், ஊர் காவல்படை போலீஸாரும் அந்த வழியே சென்ற வாகனங்களை மறித்து சோதனை செய்துள்ளார்.

அப்போது, அந்த வழியாக அகரம் கிராமத்தை சேர்ந்த நீலமேகம் என்பவருடைய மினி டெம்போ ஆட்களை ஏற்றி வந்தது. அந்த வாகனத்தை மறித்த போலீஸ்காரர்கள், அபராதம் விதித்தனர். இந்த தகவலை டிரைவர், நீலமேகத்துக்கு தெரிவித்தார்.

போதையில் இருந்த நீலமேகம், காவல்நிலையத்துக்கு வந்து தகராறு செய்தார். சாவுக்கு கூட வண்டியில போககூடாதா என சத்தம் போட்டவர், அசிங்கமான வார்த்தைகளால் காவலர்களை திட்டி வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.

மேலும், சப்-இன்ஸ்பெக்டர் மாரிமுத்துவை சட்டையை பிடித்து கன்னத்தில் நீலமேகம் அறைந்துவிட்டார். அடித்ததுதான் தாமதம்,  நீலமேகத்தை காவல்நிலையத்திற்குள் வைத்து மாரிமுத்துவும், ஊர்காவல்படையினரும் சேர்ந்து கசக்கி பிழிந்தனர்.

##~~##
இந்த செய்தி அருகில் உள்ள வண்ணாரம் பூண்டி, அகரம், வி.களத்தூர் கிராம பொதுமக்கள் தெரியவந்ததால் காவல்நிலையத்தை முற்றுகையிட்டனர். பேச்சுவார்த்தையில் ஈடுபட்ட மங்கலமேடு இன்ஸ்பெக்டர் சிவசுப்ரமணியன், போலீஸ்காரன் சட்டையை பிடிச்சா சும்மா இருப்போமா என கர்ஜித்தார்.
இது குறித்து பேசிய பொது மக்கள், இந்த சப்-இன்ஸ்பெக்டர் மாரிமுத்து ரொம்ப கடுமையாக நடந்து  கொள்கிறார். எதுக்கெடுத்தாலும் அடிக்கிறதுதான் இவரோட வேலை. இவர் கூட எப்பவுமே நாலைந்து ஊர் காவல்படையினரை வச்சிருக்கார். அவர்கள் போடும் ஆட்டமே தனியாக உள்ளது. பன்னிரெண்டவாது பரீட்சை முடித்த பசங்கள் மீது தடியடி நடத்தியதோடு, பள்ளிக்கூட பசங்களை ஸ்டேசனில் வைத்து கவனித்து அனுப்பியவர்கள்தான் இந்த டீம்.

அப்படிதான் ஒரு துக்க காரியத்துக்கு ஆட்களை ஏற்றிக்கிட்டு போன வண்டியை மறித்து ஃபைன் போட்டிருக்கார். கேட்க போன நீலமேகத்தை கடுமையாக தாக்கியதோடு, வழக்கு போட்டிருக்காங்க. கிராமத்து மக்களிடம் சின்சியாரிட்டியை காட்டும் மாரிமுத்து போன்ற எஸ்.ஐ.யை பெரம்பலூர் டவுன்ல போட்டா சூப்பரா இருக்கும். ஏன் அதை செய்ய மாட்டங்குறாங்க" என்றார்கள்.

சி.ஆனந்தகுமார்