Published:Updated:

வீட்டின் மண் சுவர் இடிந்து 3 பேர் பலி! (படங்கள்)

வீட்டின் மண் சுவர் இடிந்து 3 பேர் பலி!  (படங்கள்)
வீட்டின் மண் சுவர் இடிந்து 3 பேர் பலி! (படங்கள்)

ராமநாதபுரம்: மண் சுவரினால் ஆன ஓட்டு வீட்டின் பராமரிப்பு பணியில் ஈடுபட்டபோது சுவர் இடிந்து விழுந்து 3 பேர் பலியாகி உள்ளனர்.

வீட்டின் மண் சுவர் இடிந்து 3 பேர் பலி!  (படங்கள்)

ராமநாதபுரம் மாவட்டம் திருப்பாலைக்குடி போலீஸ் சரகம் அத்தானூர் என்ற கிராமத்தைச் சேர்ந்தவர் மாரிக்கண்ணு (57). இவர் மண் சுவரினால் கட்டப்பட்ட ஓட்டு வீட்டில் வசித்து வருகிறார். இந்த வீட்டை பராமரிக்கும் பணியில் இரு நாட்களாக மாரிக்கண்ணு, கட்டிட தொழிலாளி தில்லையப்பன் (36), கருங்குடியைச் சேர்ந்த குஞ்சரம்மாள் (36) ஆகியோர் ஈடுபட்டு வந்தனர்.

இந்த நிலையில் நேற்று மாலை 6.30 மணியளவில் வேலை நடந்து கொண்டிருந்தபோது, திடீரென வீட்டின் மேற்புறத்திலுள்ள ஓட்டின் சட்டம் சாய்ந்து, வீட்டின் சுவர் மீது விழுந்தது. இதனால் பாரம் தாங்காமல் வீட்டின் மண் சுவர் இடிந்து விழுந்தது. இதில் பணியில் ஈடுபட்டிருந்த 3 பேரும் இடிபாட்டுக்குள் சிக்கினர்.

உடனடியாக அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் மீட்பு பணியில் ஈடுபட்டனர். ஆனால், மாரிக்கண்ணு, தில்லையப்பன் ஆகியோர் சம்பவ இடத்திலேயே இறந்தனர். மாரிக்கன்னுவின் உறவினரான குஞ்சரம்மாள் ராமநாதபுரம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் இறந்தார்.

இச்சம்பவம் குறித்து திருப்பாலைக்குடி போலீசாரும், திருவாடனை வருவாய்த்துறையினரும் விரைந்து சென்று விசாரணை நடத்தினர்.

உ.பாண்டி