Published:Updated:

இரட்டை டீசல் விலைக்கு விதிக்கப்பட்ட இடைக்காலத் தடை ரத்து!

இரட்டை டீசல் விலைக்கு விதிக்கப்பட்ட இடைக்காலத் தடை ரத்து!
இரட்டை டீசல் விலைக்கு விதிக்கப்பட்ட இடைக்காலத் தடை ரத்து!
இரட்டை டீசல் விலைக்கு விதிக்கப்பட்ட இடைக்காலத் தடை ரத்து!

சென்னை: டீசலை மொத்தமாக வாங்குவோருக்கு ஒரு விலையும், தனியாருக்கு ஒரு விலையும் வைத்து விற்கும் முறைக்கு விதிக்கப்பட்ட இடைக்காலத் தடையை சென்னை உயர்நீதிமன்றம் ரத்து செய்துள்ளது.

எண்ணெய் நிறுவனங்களிடம் இருந்து மொத்தமாக டீசலை வாங்கும் மாநில போக்குவரத்துக் கழகங்களுக்கும், ரயில்வேக்கும் ஒரு விலையும், தனியார் பெட்ரோல் பங்க் நிறுவனங்களுக்கு ஒரு விலையும் வைத்து விற்கும் இரட்டை விலைக் கொள்கையை ரத்து செய்ய வேண்டும் என்று கோரி தமிழக அரசு சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தது.

மனுவை விசாரித்த தனி நீதிபதி, மத்திய அரசின் இரட்டை விலைக் கொள்கைக்கு இடைக்காலத் தடை வித்திது உத்தரவிட்டிருந்தார். இந்த இடைக்கால உத்தரவை ரத்து செய்யக் கோரி மத்திய பெட்ரோலிய அமைச்சகம் மேல்முறையீடு செய்தது.

##~~##
இந்த மனுவை இனு விசாரித்த சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி ஆர்.கே. அகர்வால், பால்வசந்தகுமார் ஆகியோர் அடங்கிய முதன்மை அமர்வு, தனி நீதிபதி விதித்த இடைக்காலத் தடையை நீக்கி உத்தரவிட்டது.