Published:Updated:

ஸ்டெர்லைட் ஆலையை ஆய்வு செய்வதற்காக வந்தது 4 பேர் குழு (படங்கள்)

ஸ்டெர்லைட் ஆலையை ஆய்வு செய்வதற்காக வந்தது 4 பேர் குழு (படங்கள்)
ஸ்டெர்லைட் ஆலையை ஆய்வு செய்வதற்காக வந்தது 4 பேர் குழு (படங்கள்)

தூத்துக்குடி: ஸ்டெர்லைட் ஆலையை ஆய்வு செய்வதற்காக 4 பேர் கொண்ட குழு இன்று காலை வந்தது. அவர்கள் தங்களின் ஆய்வு பணியை தொடங்கியிருக்கின்றனர்.

ஸ்டெர்லைட் ஆலையை ஆய்வு செய்வதற்காக வந்தது 4 பேர் குழு (படங்கள்)

கடந்த மாதம் 23ஆம் தேதி தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையிலிருந்து வெளியான விஷவாயு தூத்துக்குடி நகர் மக்களுக்கு பெரிய துன்பத்தை கொடுத்ததை தொடர்ந்து ஆலைக்கு எதிரான போராட்டங்கள் விஸ்பரூபம் எடுத்தன.

அதைத்தொடர்ந்து தமிழ்நாடு மாசுகட்டுப்பாடு வாரியம் உத்தரவின் பேரில் ஆலை தற்போது மூடப்பட்டிருக்கிறது. உச்ச நீதிமன்றம் மற்றும் பசுமைத் தீர்ப்பாயத்தில் முறையிட்டது ஆலை நிர்வாகம்.

ஸ்டெர்லைட் ஆலையை ஆய்வு செய்வதற்காக வந்தது 4 பேர் குழு (படங்கள்)

‘நூறு கோடி ரூபாயை பிணைய தொகையாக மாவட்ட கலெக்டரிடம் கொடுத்து வைக்க வேண்டும். அதிலிருந்து வரக்கூடிய வட்டியை கொண்டு மக்களுக்கு தேவையான உதவியை செய்ய வேண்டும்’ என உச்ச நீதி மன்றம் உத்தரவு பிறப்பித்திருக்கிறது.
 

ஸ்டெர்லைட் ஆலையை ஆய்வு செய்வதற்காக வந்தது 4 பேர் குழு (படங்கள்)

இதைத் தொடர்ந்து பசுமைத் தீர்ப்பாயம் நான்கு பேர் கொண்ட குழு ஒன்றை அமைத்திருந்தது. அதன் அடிப்படையில் இன்று காலை 9 மணியளவில் ஐ.ஐ.டி. பேராசிரியர்கள் சாய், லிக்கி ஜோசப், ஸ்டெர்லைட் ஆலை பொது மேலாளர் சுமதி, மாசு கட்டுப்பாட்டு வாரிய அதிகாரி மோகன் நாயுடு ஆகியோர் அடங்கிய அந்த குழு ஆலைக்கு வந்து ஆய்வு மேற்கொண்டு வருகிறார்கள்.

வரும் 29ஆம் தேதி ஆய்வு குறித்த அறிவிக்கையை பசுமை தீர்ப்பாயத்திடம் 4 பேர் கொண்ட குழு அளிப்பார்கள். அதன்பிறகே ஆலை தொடர்ந்து இயக்கப்படுமா? மூடப்படுமா என்பது தெரியவரும்.

எஸ்.சரவணப்பெருமாள்

படங்கள்:
ஏ.சிதம்பரம்