Published:Updated:

திருடனை அடித்துக் கொன்ற கிராம மக்கள்!

திருடனை அடித்துக் கொன்ற கிராம மக்கள்!
திருடனை அடித்துக் கொன்ற கிராம மக்கள்!

பெரம்பலூர்: இரவு நேரத்தில் திருட வந்தவனை கிராம மக்கள்ளே அடித்து கொன்றிருக்கிறார்கள் என்ற செய்தி பெரம்பலூர் முழுக்க பரவ, திருடர்களின் மத்தியிலும், சமூக ஆர்வலர்கள் மத்தியிலும் கலக்கத்தை ஏற்படுத்தி உள்ளது.

திருடனை அடித்துக் கொன்ற கிராம மக்கள்!

பெரம்பலூர் மாவட்டம், குன்னம் அருகே அமைந்துள்ளது கல்பாடி எறையூர் கிராமம். இங்கு விவசாய மக்களும், கூலி தொழிலாளிகளும்தான் அதிகம் வசிக்கின்றனர். இங்கு தினமும் இரவு 12 மணியிலிருந்து 1 மணி வரை மின்வெட்டு ஏற்படுவது வழக்கம்.

நேற்று இந்த நேரத்தில் காற்று வாங்குவதற்காக வெளியே வந்த பால்ராஜ், வேல்முருகன், ராஜாராம், முருகேசன் ஆகிய நான்கு பேரும் ஒரு மரத்தடியில் உட்கார்ந்திருந்தனர். அப்போது அந்த வழியாக இருசக்கர வாகனத்தில் அடையாளம் தெரியாத மூன்று நபர்கள் வந்துள்ளனர்.

உடனே அங்கு உட்கார்ந்திருந்த நான்கு பேரும் சந்தேகத்தின் பேரில் இருசக்கர வாகனத்தில் வந்தவர்களை அழைத்தபோது, இருவர் பயந்து ஓடிவிட்டனர். வாகனத்தை ஓட்டிவந்தவர் மட்டும் மாட்டிக்கொள்ள அவரிடம் விசாரித்தில், பெரம்பலூர் அருகே துறைமங்கலத்தைச் சேர்ந்த வடிவேலு என்பது தெரியவந்தது.

##~~##
பின்பு நான்கு பேரும் அந்த வாகனத்தை சோதனையிட்டிருக்கின்றனர். அதில் மிளகாய் பொடி, கத்தி, இரும்பு ராடு போன்ற ஆயுதங்கள் இருந்திருக்கின்றன. இதற்குள் அங்கு கூடிவிட்ட கிராம மக்கள் சந்தேகமடைந்து வடிவேலுவை அருகில் இருந்த மின்கம்பத்தில் கட்டி வைத்து அடித்துள்ளனர். அடி தாங்க முடியாமல் மூன்று மணியளவில் வடிவேலு இறந்து விட்டான்.
சம்பவ இடத்திற்கு வந்த டி.எஸ்.பி. சுதாசினியிடம் தொடர்பு கொண்டோம். 'ஊர் மக்களான பால்ராஜ், வேல்முருகன், ராஜாராம், முருகேசன் ஆகிய நான்கு பேரிடமும் விசாரித்து வருகிறோம். தப்பியோடிய 2 பேரையும் தேடி வருகிறோம்.

யார் மீதாவது சந்தேகம் வந்தால் அவர்களை பிடித்து எங்களிடம் ஒப்படைப்பதுதான் சரி. இவர்களே சட்டத்தை கையிலெடுப்பது தவறான செயல். இதுபோன்ற செயல்கள் இனிமேலும் தொடரக்கூடாது என்பதற்காக தக்க தண்டனை வாங்கிக் கொடுப்போம்' என்றார்.

எம். ராமசாமி