Published:Updated:

சிவகாசி அருகே பட்டாசு ஆலையில் தீ: 3 தொழிலாளர்கள் பலி

சிவகாசி அருகே பட்டாசு ஆலையில் தீ: 3 தொழிலாளர்கள் பலி
சிவகாசி அருகே பட்டாசு ஆலையில் தீ: 3 தொழிலாளர்கள் பலி

சிவகாசி: சிவகாசி அருகே பட்டாசு ஆலையில் நடந்த வெடி விபத்தில் 3 பேர் பலியாகி உள்ளனர். காயமடைந்த 2 பேர் சிகிச்சைக்காக மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.

சிவகாசி அருகே பட்டாசு ஆலையில் தீ: 3 தொழிலாளர்கள் பலி

சிவகாசியில் இருந்து சாத்தூர் செல்லும் ரோட்டில் கோனாம்பட்டி என்ற ஊர் உள்ளது. இங்கு பராசக்தி பயர் ஒர்க்ஸ் என்ற பட்டாசு ஆலை இயங்கி வருகிறது. இங்கு சுமார் 20க்கும் மேற்பட்ட அறைகளில் பட்டாசுகள் தயாரிக்கும் பணி நடந்து வந்தது.

சிவகாசி அருகே பட்டாசு ஆலையில் தீ: 3 தொழிலாளர்கள் பலி

இந்நிலையில் இன்று மதியம் 3.45 மணியளவில் ஒரு அறையில் பேன்சி ரக பட்டாசுகளை தயாரிக்கும் பணியில் ஐந்து தொழிலாளர்கள் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர்.

சிவகாசி அருகே பட்டாசு ஆலையில் தீ: 3 தொழிலாளர்கள் பலி

வெடிமருந்தை கலக்கும் போது திடீரென ஏற்பட்ட வெடி விபத்தில் அறை முழுவதும் தீப்பிடித்து, கட்டிடமும் வெடித்து சிதறியது.

##~~##
இதில் திருத்தங்கல்லைச் சேர்ந்த 3 ஆண் தொழிலாளர்கள் சம்பவ இடத்திலேயே உடல் கருகி பலியாகினர். இடுபாடுகளுக்குள் சிக்கி இருந்த 2 பேரை மீட்டு சிகிச்சைக்காக சிவகாசி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.
தீ விபத்து குறித்து தகவல் அறிந்ததும் சிவகாசி, சாத்தூர் பகுதிகளில் இருந்து தீயணைப்பு அதிகாரிகள் விரைந்து வந்து தீயணைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
இந்த விபத்தில் பலியானவர்கள் மற்றும் காயமடைந்தவர்களின் விவரம் இதுவரை தெரியவில்லை.
-எம்.கார்த்தி
படங்கள்:
ஆர்.எம்.முத்துராஜ்