Published:Updated:

ஊழலில் உலக சாதனை: கர்நாடக பா.ஜ. அரசு மீது ராகுல் காந்தி குற்றச்சாட்டு!

பெங்களூரு:  கர்நாடகாவில் ஆளும் பா.ஜனதா அரசு, ஊழல் புரிவதில் உலக சாதனை படைத்துள்ளதாக காங்கிரஸ் கட்சியின் துணை தலைவர் ராகுல் காந்தி குற்றம் சாட்டியுள்ளார்.

கர்நாடகாவில் மே 5 ஆம் தேதி நடைபெற உள்ள சட்டசபை தேர்தலுக்கான இரண்டாவது கட்ட பிரச்சாரத்தை மேற்கொண்டுள்ள ராகுல் காந்தி, இன்று ஹவேரி அருகே நடைபெற்ற பேரணியின் இறுதியில் உரையாற்றினார்.

அப்போது பேசிய அவர்,"மத்தியில் ஆளும் கட்சியின் ஊழலைப் பற்றி பா.ஜனதா பேசி வருகிறது. ஆனால், பா.ஜனதா ஆளும் கர்நாடகாவில் நடைபெறும் ஊழல்கள் அதன் கண்ணில் படவில்லை. ஊழலில் கர்நாடக மாநிலத்தில் ஆளும் பா.ஜனதா அரசு உலக சாதனையே படைத்துவிட்டது.

##~~##
நாட்டு மக்களின் நலனை புறக்கணித்துவிட்டு, பணத்துக்காக பா.ஜனதா தலைவர்கள் சண்டையிட்டுக் கொள்கிறார்கள். அதுபோன்ற ஆட்சி மீண்டும் தேவையா? " என்றார்.