மரக்காணம் கலவரம்: சட்டசபையில் பிரச்னை எழுப்ப அனுமதி மறுப்பு!


சென்னை: மரக்காணம் கலவரம் தொடர்பாக தமிழக சட்டசபையில் இன்று பல்வேறு கட்சிகள், பிரச்னை எழுப்ப முயன்றபோது சபாநாயகர் அதற்கு அனுமதி மறுத்துவிட்டார்.
தமிழக சட்டசபையில் இன்று கேள்வி நேரம் முடிந்ததும், மரக்காணத்தில் நேற்று நடைபெற்ற கலவரம் தொடர்பாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட், தே.மு.தி.க. மற்றும் புதிய தமிழகம் ஆகிய கட்சிகளை சேர்ந்த எம்.எல்.ஏ.க்கள் பிரச்னையை எழுப்பி பேச முற்பட்டனர்.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு எம்.எல்.ஏ. பாலகிருஷ்ணன் பிரச்னை குறித்து முதலில் பேச எழுந்தார்.ஆனால் அதற்கு சபாநாயகர் தனபால் அனுமதி மறுத்தார்.
இதுகுறித்து அவர் கூறும்போது,"நீங்கள் 10.15 மணிக்குத்தான் கடிதம் கொடுத்து இருக்கிறீர்கள். அதை அரசுக்கு அனுப்பி வைத்து இருக்கிறேன். பதில் வந்ததும் எடுத்துக் கொள்கிறேன்" என்றார். ஆனாலும் பாலகிருஷ்ணன் உள்பட எதிர்க்கட்சி எம்.எல்.ஏ.க்கள் ஒட்டுமொத்தமாக எழுந்து சென்று இப்பிரச்னை குறித்து விவாதிக்க வேண்டும் என வலியுறுத்தினார்கள்.
##~~## |
பின்னர் அமைச்சர் கே.பி.முனுசாமி எழுந்து அவையை நடத்த அனைவரும் ஒத்துழைப்பு கொடுங்கள் என கேட்டுக் கொண்டார். அதைத் தொடர்ந்து எதிர்க் கட்சி எம்.எல்.ஏ.க்கள் அனைவரும் அமர்ந்தனர்.