Published:Updated:

திருச்சி அருகே பரிதாபம்: மணல் சரிந்து 4 பேர் பலி!

திருச்சி அருகே பரிதாபம்: மணல் சரிந்து 4 பேர் பலி!
திருச்சி அருகே பரிதாபம்: மணல் சரிந்து 4 பேர் பலி!

திருச்சி: திருச்சி மாவட்டம், நங்கவரம் அருகே மாரியம்மன் கோவிலுக்கு பால் குடம் எடுக்க சென்ற 3 பெண்கள் உள்பட 4 பேர் மணல் சரிந்து விழுந்து பலியாகியுள்ளனர்.

##~~##
திருச்சி மாவட்டம், நங்கவரம் அருகேயுள்ள சமாரிமேடு கிராமத்தில் மாரியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் வருடந்தோறும் கிராம மக்கள் திருவிழா கொண்டாடுவது வழக்கம். ஒரு வாரம் நடக்கும் இந்த திருவிழா இந்த வருடமும் தொடங்கி இன்று பால் குடம் நிகழ்ச்சி நடக்கவிருந்தது.
இந்த நிலையில், பால் குடம் எடுப்பதற்காக பெருகமணி அருகேயுள்ள காவிரி ஆற்றில் தண்ணீர் எடுக்க அந்த கிராம மக்கள் வந்தனர். அப்போது மண் சரிந்து தண்ணீருக்குள் விழுந்து சிலர் புதைந்தனர். அவர்களில் உமா ரவி, தீபா, பிரமிளா, ஜீவானந்தம் ஆகிய நான்கு பேரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
சாந்தி என்கிற பெண் உயிருக்கு ஆபத்தான நிலையில் திருச்சி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இச்சம்பவம் தொடர்பாக பெட்டவாய்தலை காவல் நிலைய போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கோயில் விழாவில் மணல் சரிந்து 4 பேர் பலியான சம்பவம் இந்த பகுதி மக்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
அ.சாதிக் பாட்ஷா