Published:Updated:

ஈமு கோழி முதலீட்டாளர்களுக்கு நிவாரணம்: கொங்குநாடு மக்கள் தேசியகட்சி வலியுறுத்தல்

ஈமு கோழி முதலீட்டாளர்களுக்கு நிவாரணம்: கொங்குநாடு மக்கள் தேசியகட்சி வலியுறுத்தல்
ஈமு கோழி முதலீட்டாளர்களுக்கு நிவாரணம்: கொங்குநாடு மக்கள் தேசியகட்சி வலியுறுத்தல்
ஈமு கோழி முதலீட்டாளர்களுக்கு நிவாரணம்: கொங்குநாடு மக்கள் தேசியகட்சி வலியுறுத்தல்

சென்னை: ஈமு கோழி முதலீட்டாளர்களுக்கு அரசு நிவாரணம் வழங்க வேண்டும் என்று கொங்கு நாடு மக்கள் தேசிய கட்சி வலியுறுத்தி உள்ளது.

இது தொடர்பாக கொங்கு நாடு மக்கள் தேசிய கட்சி பொதுச்செயலாளர் ஈ.ஆர்.ஈஸ்வரன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

ஈமு கோழி நிறுவனங்களில் முதலீடு செய்து ஏமாந்தவர்கள் அனைவரும் ஏழை, எளிய மக்கள்தான். விவசாயத்தை நம்பி வாழ்ந்தவர்களும், வேலையிலிருந்து ஓய்வு பெற்ற வயதானவர்களும் தங்களிடமிருந்த மொத்த பணத்தையும் முதலீடு செய்தார்கள். அரசு அவர்களை காப்பாற்றவில்லையென்றால் தற்கொலை செய்து கொள்வதைத்தவிர வேறு வழியில்லை. மக்கள் பணத்தை முதலீடாக பெறுகின்ற நிறுவனங்களை காவல்துறை கண்காணித்தாக வேண்டும். அந்தக் கடமை அரசுக்கு இருக்கிறது.

ஈமு கோழி நிறுவனங்கள் ரகசியமாக முதலீட்டைப் பெறவில்லை. அளவுக்கதிகமான விளம்பரங்கள் செய்துதான் மக்களை இழுத்தார்கள். சீட்டுக் கம்பெனிகளில் பணம் கட்டி ஏமாந்த மக்களுக்காக மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி ரூ.500 கோடி நிதி ஒதுக்கியிருப்பதாக செய்தி வெளியாகி உள்ளது. அதே நிலையை தமிழக அரசும் எடுக்க வேண்டும்.

##~~##
மக்கள் ஈமு கோழி நிறுவனங்களில் பணம் கட்டி ஏமாந்ததற்கு அரசு காரணமில்லை என்று சொல்லக்கூடாது. அரசிற்கும், காவல்துறைக்கும் பொறுப்பிருக்கிறது என்பதை உணர்ந்து பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணம் வழங்க வேண்டும்.
ஏழை மக்களின் வாழ்க்கையைப் பறித்த ஈமு கோழி அதிபர்களிடத்தில் சில அரசு அதிகாரிகள் லஞ்சம் பெற்றார்கள் என்ற செய்தி மிகுந்த வேதனையளிக்கிறது. லட்சக்கணக்கான குடும்பங்களைக் காப்பாற்ற தமிழக முதலமைச்சர் முன் வரவேண்டும். ஏமாற்றத் திட்டமிட்டு செயலாற்றிய நிறுவனங்களை ஆரம்பத்திலேயே தடுத்து நிறுத்தத் தவறியது அரசு தான்.
இவ்வாறு ஈ.ஆர்.ஈஸ்வரன் கூறப்பட்டுள்ளது.