

சென்னை: மரக்காணம் கலவரம் குறித்து விவாதிக்க அனுமதிக்க மறுத்ததால், தமிழக சட்டசபையிலிருந்து புதிய தமிழகம் கட்சி இன்று வெளிநடப்பு செய்தது.
தமிழக சட்டசபையில் இன்று காலை கூடியதும், கேள்வி நேரத்தை ஒத்திவைத்துவிட்டு, மரக்காணம் சம்பவம் குறித்து விவாதிக்க வேண்டும் என புதிய தமிழகம் கட்சி கோரியது.
##~~## |
ஆனால் இதற்கு சபாநாயகர் அனுமதி மறுத்ததால், புதிய தமிழகம் கட்சியை சேர்ந்த கிருஷ்ணசாமி, ராமசாமி ஆகியோர் அவையிலிருந்து வெளிநடப்பு செய்தனர்.