Published:Updated:

மாவட்டங்களுக்கிடையேயான ஹாக்கி போட்டி: சென்னை அணி வெற்றி (படங்கள்)

மாவட்டங்களுக்கிடையேயான ஹாக்கி போட்டி: சென்னை அணி வெற்றி (படங்கள்)
மாவட்டங்களுக்கிடையேயான ஹாக்கி போட்டி: சென்னை அணி வெற்றி (படங்கள்)

ராமநாதபுரம்: ராமநாதபுரத்தில் நடந்த மாவட்டங்களுக்கு இடையேயான ஜூனியர் சாம்பியன்ஷிப் ஹாக்கி கோப்பையை சென்னை மாவட்ட அணி தட்டி சென்றது.

மாவட்டங்களுக்கிடையேயான ஹாக்கி போட்டி: சென்னை அணி வெற்றி (படங்கள்)

தமிழ்நாடு ஹாக்கி யூனிட் சார்பில் செய்யதம்மாள்-கனகமணி நினைவு கோப்பைக்கான 3ஆம் ஆண்டு ஜூனியர் ஹாக்கி போட்டி ராமநாதபுரத்தில் கடந்த 5 நாட்களாக நடந்தது. சென்னை, மதுரை, கோவை, சேலம், திருச்சி, ராமநாதபுரம் உள்ளிட்ட 25 மாவட்ட அணிகள் இதில் பங்கேற்றன.

மாவட்டங்களுக்கிடையேயான ஹாக்கி போட்டி: சென்னை அணி வெற்றி (படங்கள்)

நேற்று நடந்த இறுதி போட்டியில் சென்னை மாவட்ட அணியும், தஞ்சை மாவட்ட அணியும் மோதின. பரபரப்பாக நடந்த இந்த போட்டியில் ஆரம்பம் முதலே அனல் பறந்தது. ஆனால் ஆட்டத்தின் இறுதி வரை இரு அணிகளும் கோல் எதுவும் போடவில்லை. இதையடுத்து பெனால்டிக் சூட் மூலம் வெற்றி தீர்மானிக்கப்பட்டது. இதில் சென்னை அணி 4-3 என்ற கோல்கணக்கில் தஞ்சை அணியை வீழ்த்தி கோப்பையை வென்றது.

மாவட்டங்களுக்கிடையேயான ஹாக்கி போட்டி: சென்னை அணி வெற்றி (படங்கள்)

பின்னர் நடந்த பரிசளிப்பு விழாவிற்கு தமிழ்நாடு ஹாக்கி யூனிட் தலைவர் ராதாகிருஷ்ணன் தலைமை வகித்தார். இறுதிபோட்டியில் வெற்றி பெற்ற சென்னை அணிக்கு ராமநாதபுரம் டி.எஸ்.பி. முரளிதரன் கோப்பையை வழங்கினார். இரண்டாமிடம் பிடித்த தஞ்சை அணிக்கு தமிழ்நாடு ஹாக்கி யூனிட் செயலாளர் ரேணுகாலெட்சுமி பரிசு வழங்கினார். மூன்றாமிடம் பிடித்த மதுரை மாவட்ட அணிக்கு டாக்டர் மதுரம் அரவிந்தராஜ் பரிசு வழங்கினார்.

மாவட்டங்களுக்கிடையேயான ஹாக்கி போட்டி: சென்னை அணி வெற்றி (படங்கள்)

இவ்விழாவில் மாநில ஹாக்கி யூனிட் பொருளாளர் காதர் முகைதீன், ராமநாதபுரம் மாவட்ட ஹாக்கி சங்கத்தின் புரவலர் டாக்டர் அரவிந்த்ராஜ், தமிழ்நாடு ஆண்கள் ஹாக்கி யூனிட் பொறுப்பாளர்கள் செல்லத்துரை அப்துல்லா, டாக்டர் சின்னத்துரை அப்துல்லா, மாவட்ட விளையாட்டு அலுவலர் பிரகாஷம், மாவட்ட ஹாக்கி சங்க செயலாளர் சேதுபதி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

இரா.மோகன்


படங்கள்: உ.பாண்டி