Published:Updated:

தர்மபுரி கலவரம்: சேத மதிப்பீடுகளை ஆய்வு செய்ய ஐவர் குழு அமைப்பு!

தர்மபுரி கலவரம்: சேத மதிப்பீடுகளை ஆய்வு செய்ய ஐவர் குழு அமைப்பு!
தர்மபுரி கலவரம்: சேத மதிப்பீடுகளை ஆய்வு செய்ய ஐவர் குழு அமைப்பு!
தர்மபுரி கலவரம்: சேத மதிப்பீடுகளை ஆய்வு செய்ய ஐவர் குழு அமைப்பு!

சென்னை: தர்மபுரி கலவரத்தில் சேதமடைந்த வீடுகள் மற்றும் சொத்து மதிப்புகளை ஆய்வு செய்ய ஐ.ஏ.எஸ். அதிகாரி வாசுகி தலைமையில் ஐவர் குழு ஒன்றை அமைத்துள்ளதாக சென்னை உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு தெரிவித்துள்ளது.

தர்மபுரி கலவரம் தொடர்பாக வழக்கறிஞர் செங்கொடி தொடர்ந்த வழக்கு சென்னை உயர் நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது மேற்கண்ட தகவலை அரசு வழக்கறிஞர் தெரிவித்தார்.

இதனைத் தொடர்ந்து கலவரத்தால் பாதிக்கப்பட்ட நத்தம் காலனி, செங்கல்மேடு மற்றும் அண்ணா நகர் ஆகிய கிராமங்களில், இந்த குழு சென்று சேதமடைந்த வீடுகள் மற்றும் சொத்து மதிப்புகள் குறித்து ஆய்வு செய்வதோடு, இப்பகுதி மக்களுக்கு ஏற்கனவே அரசு வழங்கிய நிவாரணங்கள் கிடைத்ததா என்பது குறித்தும் ஆய்வு செய்து அதன் அறிக்கையை வருகிற ஜூன் 21 ஆம் தேதிக்குள் தாக்கல் செய்ய வேண்டும் என நீதிபதிகள் பானுமதி மற்றும் ரவிச்சந்திர பாபு ஆகியோரடங்கிய அமர்வு உத்தரவிட்டனர்.

##~~##
அத்துடன் இவ்வழக்கின் அடுத்தக்கட்ட விசாரணையை வருகிற ஜூன் 27 ஆம் தேதிக்கும் ஒத்திவைத்து உத்தரவிட்டனர்.