Published:Updated:

மே தினம் தொழிலாளர்கள் உற்சாக கொண்டாட்டம்!

மே தினம் தொழிலாளர்கள் உற்சாக கொண்டாட்டம்!
மே தினம் தொழிலாளர்கள் உற்சாக கொண்டாட்டம்!
மே தினம் தொழிலாளர்கள் உற்சாக கொண்டாட்டம்!

சென்னை: தமிழகம் முழுவதும் 127வது மே தினம் இன்று உற்சாகமாக கொண்டாடப்பட்டது.

உழைப்பாளர்கள் போற்றும் உன்னத திருநாளாகிய மே தினமான இன்று சென்னை சிந்தாதிரிப்பேட்டையில் மே தின பூங்காவில் அமைந்துள்ள மே தின நினைவு சின்னத்தில் தி.மு.க. பொருளாளர் மு.க.ஸ்டாலின் மலர் வளையம் வைத்து வீர வணக்கம் செலுத்தினார்.

இந்த நிகழ்ச்சியில் முன்னாள் அமைச்சர் தா.மோ.அன்பரசன், டி.கே.எஸ். இளங்கோவன் எம்.பி., வட சென்னை மாவட்ட செயலாளர் ஆர்.டி.சேகர், முன்னாள் மேயர் மா.சுப்பிரமணியன், தெ.மு.ச. பொதுச் செயலாளர் சண்முகம், தொழிலாளர் அணி செயலாளர் சிங்கார ரத்தின சபாபதி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

சென்னை மாநகர அண்ணா தொழிற்சங்கம் சார்பில் பல்லவன் இல்லத்தில் கொடி ஏற்றி இனிப்பு வழங்கப்பட்டது. இதில் தாடி மா.ராசு, விஸ்வம் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

##~~##
இதேபோல் மார்க்சிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட் உள்பட பல்வேறு தொழி்ற்சங்கம் சார்பில் மே தின விழாக்கள் கொண்டாடப்பட்டது.  நிர்வாகிகள், மே தின சிறப்புகள் குறித்து பேசினர். ஆட்டோ ஓட்டுனர்களும் மே தினம் கொண்டாடினர்.