Published:Updated:

இன்ஸ்பெக்டரை பணிநீக்கம் செய்யக்கோரி வியாபாரிகள் கடையடைப்பு (படங்கள்)

இன்ஸ்பெக்டரை பணிநீக்கம் செய்யக்கோரி வியாபாரிகள் கடையடைப்பு (படங்கள்)
இன்ஸ்பெக்டரை பணிநீக்கம் செய்யக்கோரி வியாபாரிகள் கடையடைப்பு (படங்கள்)

தஞ்சாவூர்: தஞ்சை மாவட்டம், திருவையாறில், நடுக்காவேரி இன்ஸ்பெக்டரை பணிநீக்கம் செய்யக்கோரி சுமார் 500 கடைகளை அடைத்து வியாபாரிகள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

இன்ஸ்பெக்டரை பணிநீக்கம் செய்யக்கோரி வியாபாரிகள் கடையடைப்பு (படங்கள்)
##~~##
திருவையாறு பகுதியில் தினமும் இரவு 12 மணிக்கு அனைத்து கடைகளையும் மூட வேண்டும் என்ற உத்தரவு நடைமுறையில் இருந்து வருகிறது. அதுபோல் கடைக்காரர்களும் வழக்கமாக இரவு 12 மணிக்கு கடைகளை மூடி விடுவார்கள்.

இந்நிலையில் நேற்று இரவு சுமார் 11.30 மணியளவில் நடுக்காவேரி இன்ஸ்பெக்டர் சரவணன் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தார். அப்போது சில கடைகள் திறக்கப்பட்டிருந்தது. அந்த கடைகளை மூடக்கோரி திட்டினாராம்.

அதுபோல் தேரடி வீதியில் உள்ள காளீஸ்வரி ஓட்டலை மூடச்சொல்லி, அதன் மாஸ்டரை தாக்கியிருக்கிறார். அதோடு உரிமையாளரையும் தகாத வார்த்தையால் திட்டியுள்ளார்.

இதனை கண்டித்து இன்று காலையிலிருந்து அப்பகுதி வியாபாரிகள் அனைவரும் இன்ஸ்பெக்டர் சரவணனை பணி நீக்கம் செய்ய வேண்டும் எனக்கோரி போராட்டம் நடத்தி வருகின்றனர்.

கே.குணசீலன்