Published:Updated:

கார் பள்ளத்தில் விழுந்து விபத்து: கேரளாவைச் சேர்ந்த 4 டாக்டர்கள் பலி

கார் பள்ளத்தில் விழுந்து விபத்து: கேரளாவைச் சேர்ந்த 4 டாக்டர்கள் பலி
கார் பள்ளத்தில் விழுந்து விபத்து: கேரளாவைச் சேர்ந்த 4 டாக்டர்கள் பலி

தேனி: கேரள டாக்டர்கள் நான்கு பேர் கார் விபத்தில் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

கேரளா மாநிலம், கோட்டயம் அரசு மருத்துவமனையில் தொடுபுழாவைச் சேர்ந்த ஆண்டோ பி.தாமஸ், ஏட்டுமானூர் அனிஸ்குமார், சங்கரனாச்சேரி ஜோசப் ஜார்ஜ், சங்கனூர் நித்திஷ்குமார். திருவனந்தபுரம் விஷ்ணுதயாள், பாலாவைச் சேர்ந்த அல்போன்ஸ் ஆகியோர் டாக்டராக பணிபுரிந்து வந்தனர்.

##~~##
நேற்று இவர்கள் அனைவரும் வாகைமண் என்ற இடத்திற்கு இனோவா கார் மூலம் சுற்றுலா சென்றனர். கார் தங்கலூபாறா என்ற இடத்தில் வந்து கொண்டிருந்தபோது திடீரென அருகிலுள்ள 1500 அடி பள்ளத்தில் கவிழ்ந்தது. இந்த விபத்தில் ஆண்டோ பி.தாமஸ், அனிஸ்குமார், ஜோசப் ஜார்ஜ், நித்திஷ்குமார் ஆகிய 4 பேரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். படுகாயம் அடைந்த விஷ்ணுதயாள், அல்போன்ஸ் ஆகியோர் சிகிச்சைக்காக கோட்டயம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.
இந்த விபத்து குறித்து இரவு யாருக்கும் தெரியவில்லை. இன்று காலை அந்த வழியாக சென்றவர்கள் பார்த்துவிட்டு போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன் பிறகு அங்கு வந்த மீட்பு பணியினர் மதியம் 12 மணி வரை மீட்பு பணியில் ஈடுபட்டனர். ஒரே நேரத்தில் நான்கு மருத்துவர்கள் பலியான சம்பவம் கேரளாவை அதிர்ச்சிக்குள்ளாக்கி உள்ளது.
இவர்கள் மறைக்கு கேரளா முதல்வர் உம்மன்சாண்டி இரங்கல் தெரிவித்துள்ளார்.

-சன்.சரவணன்