Published:Updated:

பாலியல் புகார் சர்ச்சையில் மதுரை காமராஜர் பல்கலைக்கழகத் துறைத் தலைவர்! - நிர்வாகக் குழு விசாரணை

பாலியல் புகார் சர்ச்சையில் மதுரை காமராஜர் பல்கலைக்கழகத் துறைத் தலைவர்! - நிர்வாகக் குழு விசாரணை
பாலியல் புகார் சர்ச்சையில் மதுரை காமராஜர் பல்கலைக்கழகத் துறைத் தலைவர்! - நிர்வாகக் குழு விசாரணை

நிர்மலாதேவி விவகராத்தால் சர்ச்சைக்குள்ளாகிய மதுரை காமராஜர் பல்கலைக்கழகம், தற்போது ஆராய்ச்சி மாணவி ஒருவர் எழுப்பியுள்ள பாலியல் புகாரால் மீண்டும் சர்ச்சை வளையத்துக்குள் சிக்கியுள்ளது.

பாலியல் புகார் சர்ச்சையில் மதுரை காமராஜர் பல்கலைக்கழகத் துறைத் தலைவர்! - நிர்வாகக் குழு விசாரணை

கேரளாவிலுள்ள கல்லூரியில் பணியாற்றும் பெண் பேராசிரியர் ஒருவர், காமராஜர் பல்கலைக்கழகத்தில் மின்னணுவியால் துறையில் முனைவர் ஆய்வுப் படிப்பில் சேர்ந்தார். இந்தநிலையில்தான் அத்துறை தலைவர் கர்ணமகாராஜா மீது அவர் புகார் தெரிவித்துள்ளார். பல்கலைக்கழக நிர்வாக கமிட்டியிடம் கொடுத்த புகாரில், ``நிரந்தர பேராசிரியர் பணிக்காக, இங்கு பி.ஹெச்டி.யில் சேர்ந்தேன். அதற்கு இரண்டு லட்ச ரூபாய் கொடுத்தால்தான், படித்து முறையாக பட்டம் பெறமுடியும் என்று கர்ணமகாராஜா கட்டாயப்படுத்தியதால் கேட்ட பணத்தை கொடுத்தேன். அதுமட்டுமில்லாமல் அடிக்கடி பணம் கேட்டார், இல்லையென்றால் பி.ஹெச்டி  முடிக்க முடியாது என்று மிரட்டினார்.

அத்துறையில் நான் மட்டுமே பெண்ணாக இருந்ததால் அவரைத் தவிர வேறு யாரிடமும் பேசக்கூடாது என்றார். என்னுடைய டெஸ்கை அவருடைய அறைக்குள் மாற்றி அமைத்து நாள் முழுதும் அவர் கண்பார்வையிலயே இருப்பதுபோல் பார்த்துக்கொண்டார். அவர் சொல்வதைக் கேட்டு நடந்தால் அங்கேயே வேலை வாங்கித்தருவதாக ஆசை வார்த்தை கூறி தொல்லை செய்தார். வாட்ஸ்அப், மெயிலிலும் டார்ச்சர் செய்தார். அவர் சொல்வதைக் கேட்காததால் என்னுடைய வருகைப் பதிவேடு காணவில்லை என்றார்.

இப்போது என்னுடைய பி.ஹெச்டி. ஆய்வு படிப்பை முடிக்க விடாமல் தொடர்ந்து தொந்தரவு கொடுத்து வருகிறார், அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்று கூறியுள்ளார். தற்போது இப்புகாரை பல்கலைக்கழக நிர்வாகம் விசாரித்து வருகிறது. பேராசிரியர் கர்ணமகாராஜா தரப்போ இது பொய்ப்புகார் என்று கூறி வருகிறார்கள். காமராஜர் பல்கலைக்கழக வட்டாரம் மீண்டும் பரபரக்கத் தொடங்கியுள்ளது.