நெல்லை மாவட்டம் கல்லிடைக்குறிச்சியில் 600 ஆண்டுகள் பழைமையான நடராஜர் ஐம்பொன் சிலை 36 வருடங்களுக்கு முன்பு திருடப்பட்டது. அது, ஆஸ்திரேலியாவில் ஓர் ஆர்ட் கேலரியில் இருப்பது இப்போது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. ‘‘அந்தச் சிலையை விரைவில் மீட்டுவர தமிழக சிலைக்கடத்தல் பிரிவு ஐ.ஜி பொன்.மாணிக்கவேல் நடவடிக்கை எடுக்க வேண்டும்’’ என்று பல்வேறு தரப்பினரும் வலியுறுத்திவருகின்றனர்.

நெல்லை மாவட்டம் கல்லிடைக் குறிச்சியில் குலசேகரமுடையார் அறம்வளர்த்த நாயகி அம்மன் கோயில் உள்ளது. இது, குலசேகர பாண்டிய மன்னனால் கட்டப்பட்டது. 1982 ஜூலை 5-ம் தேதி, இந்தக் கோயிலின் பூட்டை உடைத்து உள்ளே நுழைந்த மர்ம நபர்கள், அங்கிருந்த நான்கு சிலைகளைத் திருடிச்சென்றனர். 600 ஆண்டுகள் பழைமையான இரண்டரை அடி உயரமுள்ள ஐம்பொன் நடராஜர் சிலை, இரண்டு அடி உயரமுள்ள சிவகாமி அம்மன் சிலை, ஒன்றரை அடி உயரமுள்ள மாணிக்கவாசகர் சிலை, ஓர் அடி உயரமுள்ள ஸ்ரீபலி நாயகர் சிலை ஆகியவையே திருடிச் செல்லப்பட்டவை.

இந்தக் கொள்ளை தொடர்பாக கல்லிடைக்குறிச்சி போலீஸ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தியது. அதில் எந்த முன்னேற்றமும் இல்லாத நிலையில், ‘கண்டுபிடிக்க முடியாத வழக்கு’ என 1984-ம் ஆண்டு இது முடித்துவைக்கப்பட்டது. 1985-ம் ஆண்டு, சிவகாமி அம்மன் சிலை மட்டும் ஒரு காட்டுப் பகுதியில் கண்டுபிடிக்கப்பட்டதாகத் தெரிவித்த அறநிலையத் துறையினர், பாதுகாப்பு கருதி அதை சுப்பிரமணியர் கோயிலில் வைத்திருப்பதாக ஆவணங்களில் குறிப்பிட்டனர். கொள்ளை நடந்து 36 வருடங்கள் கடந்த நிலையில், அந்த நான்கு சிலைகளும் ஆஸ்திரேலியாவின் ஆர்ட் கேலரியில் இருப்பது உறுதியாகியுள்ளது. அப்படியானால், அறநிலையத்துறையின் பாதுகாப்பில் இருக்கும் சிவகாமி அம்மன் சிலை போலியானதா என்கிற சந்தேகம் எழுந்துள்ளது.

தாமிரபரணி நதிக்கரையோரத்தில் உள்ள குலசேகரமுடை யார் கோயிலுக்குச் சென்றோம். கோயிலின் அர்ச்சகரான கிருஷ்ணமூர்த்தி சர்மாவிடம் பேசினோம். ‘‘இங்கிருந்து திருடப்பட்ட சிலைகள் வெளிநாட்டில் இருப்பதைக் கேள்விப்பட்டு உள்ளூர் மக்கள் அனைவருக்கும் மிகுந்த மகிழ்ச்சி. நான்கு சிலைகளையும் உடனே மீட்டுக்கொண்டுவர வேண்டும் என்பதே பக்தர்களின் விருப்பம். அரசு உரிய நடவடிக்கை எடுக்கும் என நம்புகிறோம்’’ என்றார்.

கோயிலுக்கு அருகே டீக்கடை வைத்துள்ள அண்ணாமலை, ‘‘எனக்கு 73 வயதாகிறது. நான் சின்ன வயதிலிருந்தே அந்த நடராஜர் சிலையைப் பார்த்திருக்கேன். ரொம்ப அற்புதமா இருக்கும். பொதுவாக நடனமாடும் நிலையில் இருக்கும் நடராஜர் சிலைகள் வட்ட வடிவத்திலேயே இருக்கும். ஆனால், இது நீள்வட்ட வடிவத்தில் இருக்கும். அருகிலேயே சிவகாமி அம்மன் சிலையும் இருக்கும். அந்தச் சிலைகள் திருடு போனதில் எல்லோருக்கும் ரொம்ப வருத்தம். பிறகு அந்த விவரத்தையே மறந்துட்டோம். இப்ப அந்தச் சிலைகள் எங்கேயோ இருக்குன்னு சொல்றாங்க. எங்களுக்கு மகிழ்ச்சியா இருக்கு’’ என்றார்.

கோயிலின் பக்த பேரவை உறுப்பினர்களில் ஒருவரான வெங்கட்ராமன், ‘‘அந்தக் கொள்ளை சம்பவம் நடந்தப்போ, எனக்கு ஒன்பது வயது. செய்தி கேள்விப்பட்டு ஓடிப்போய் பார்த்தோம். 1982 ஜூலை 5-ம் தேதி நல்ல முகூர்த்தம். நிறையக் கல்யாணங்கள் நடந்துச்சு. அன்று ராத்திரியில்தான் சிலைத் திருட்டு நடந்துச்சு. மறுநாள் விஷயம் தெரிஞ்சு, போலீஸ் விசாரிச்சாங்க. ரெண்டு வருஷத்தில் வழக்கை முடிச்சுட்டாங்க. அப்போ, சண்முக பட்டர் என்பவர் அர்ச்சகரா இருந்தார். அவரை விசாரணை என்ற பெயரில் போலீஸ்காரங்க அடிக்கடி தொந்தரவு செஞ்சாங்க. அந்த வருத்தத்துல, கோயிலுக்கு வர்றதையே அவர் நிறுத்திட்டார். சில வருடங்களாகப் பூஜை எதுவும் நடக்காம, கோயில் பூட்டிக் கிடந்துச்சு. பிறகு, வைத்தியர் குடும்பத்தைச் சேர்ந்தவங்க இந்தக் கோயிலை சீரமைச்சு கும்பாபிஷேகம் நடத்தினாங்க. பூஜைகள் இப்போ முறைப்படி நடந்துக்கிட்டிருக்கு. சிலைகள் கிடைத்திருப்பது மகிழ்ச்சியா இருக்கு. சிலைகளை சீக்கிரமே கொண்டுவர வேண்டும்’’ என்றார்.

ஆஸ்திரேலிய ஆர்ட் கேலரியில் இருக்கும் சிலைகள் குறித்த தகவல்களைத் திரட்டியதில், ‘இண்டியா பிரைட் ப்ராஜெக்ட்’ அமைப்பின் நிறுவனர்களில் ஒருவரும் ‘தி ஐடல் தெப்ஃட்’ என்ற ஆங்கில நூலின் ஆசிரியருமான எஸ்.விஜய்குமாரின் பங்களிப்பு அதிகம். இந்தியாவிலிருந்து திருடிச்செல்லப்பட்டு, பல்வேறு நாடுகளின் மியூசியங்களில் வைக்கப்பட்டுள்ள சிலைகளை ஆய்வுசெய்து, அவை எந்தக் கோயிலின் சிலைகள் என்பதைக் கண்டறிந்துவரும் பணியை இவரும் இவரின் அமைப்பினரும் செய்கிறார்கள். இதுவரை, 26 சிலைகள் மீட்கப்பட்டதற்கு உதவியாக இருந்துள்ளார், விஜய்குமார். அவரிடம் பேசினோம்.

‘‘இந்த நான்கு சிலைகள் 1982-ல் திருடப்பட்டபோதிலும், அவற்றை உடனடியாக மக்களின் பார்வைக்கு வைக்கவில்லை. இந்தச் சிலைகளை வைத்திருந்த லண்டனைச் சேர்ந்த ஃபோர்ஜ் அண்டு லின்ச் என்ற நிறுவனத்திடமிருந்து, 2001-ல் தெற்கு ஆஸ்திரேலிய ஆர்ட் கேலரி (ஏ.ஜி.எஸ்.ஏ) வாங்கியுள்ளது. அப்போது, ‘இவற்றை கிரீஸ் நாட்டைச் சேர்ந்த ஒரு பழங்காலப் பொருட்கள் சேகரிப்பாளர் வைத்திருந்தார்’ என ஃபோர்ஜ் அண்டு லின்ச் நிறுவனம் சொல்லியிருக்கிறது. எந்த ஆவணமும் இல்லாமலே இவற்றை அதிக விலை கொடுத்து வாங்கியுள்ளனர். 2001 ஆகஸ்ட் 13-ம் தேதி, தெற்கு ஆஸ்திரேலிய ஆர்ட் கேலரிக்கு நடராஜர் சிலை உள்ளிட்ட நான்கும் வந்துள்ளன.

அப்போதே அவற்றைப் பொதுமக்களின் பார்வைக்கு அவர்கள் வைத்துள்ளனர். திருட்டு சிலைகள் குறித்த விழிப்பு உணர்வு ஏற்படத் தொடங்கிய பின்னர், 2013-ல் எங்கள் அமைப்பைச் சேர்ந்த நண்பர் ஒருவர், அங்கே நடராஜர் சிலையைப் பார்த்துள்ளார். அவருக்குச் சந்தேகம் எழுந்ததால், அந்தச் சிலையின் ஆவணங்கள் குறித்துக் கேள்வி எழுப்பினோம். நாங்கள் ஆர்ட் கேலரி நிறுவனத்துக்கு எழுதிய கடிதங்கள், அவர்களை அச்சமடைய வைத்திருக்க வேண்டும். ஆனாலும் எங்களுக்குப் பதில் தரவில்லை. நாங்கள் தொடர்ந்து நடராஜர் சிலை பற்றிக் கேள்வி எழுப்பியதால், 2016-ல் அவர்களின் அதிகாரிகள் புதுவையில் உள்ள ஃபிரெஞ்ச் இன்ஸ்டிடியூட்டுக்கு (ஐ.எஃப்.பி) இருமுறை வந்து ஆய்வு செய்துள்ளனர் நடராஜர் சிலையை 1958-ம் ஆண்டு படம்பிடித்துள்ளது ஃபிரெஞ்ச் இன்ஸ்டிடியூட். எனவே, பழைய புகைப்படங்கள் அங்கே இருந்தன. அப்போது, நடராஜர் சிலை குறித்த உண்மை விவரங்கள் அவர்களுக்குத் தெரியவந்துள்ளது. ‘எங்களுக்கு 2016-ல்தான், அது தமிழகக் கோயிலில் கொள்ளையடிக்கப்பட்ட சிலை என்பது தெரியவந்தது’ என்று அதன்பின் எங்களுக்குப் பதில் தெரிவித்தனர். இரண்டு வருடங்களுக்கு முன்பே அது குறித்த விவரம் தெரியவந்தபோதிலும், இரண்டு வருடங்களாக அதை அவர்கள் வெளியில் தெரிவிக்காமல் இருந்ததே தவறானது அல்லவா?

இப்போது இந்தச் சிலையின் படங்களை தமிழக சிலைக்கடத்தல் தடுப்புப்பிரிவு வெளியிட்டுள்ளது. ஐ.நா., 1972-ல் கொண்டுவந்த உலக பாரம்பர்யச் சின்னங்கள் தொடர்பான சட்டத்தில், இந்தியாவும் ஆஸ்திரேலியாவும் கையெழுத்திட்டுள்ளன. அதனால், நடராஜர் உள்ளிட்ட நான்கு சிலைகளையும் மீட்டுக்கொண்டுவருவதில் எந்தச் சிரமமும் இருக்காது. ஏற்கெனவே முடித்து வைக்கப்பட்ட கல்லிடைக்குறிச்சி காவல் நிலையத்தின் வழக்கை மீண்டும் உயிர்ப்பிக்க, தமிழக சிலைக்கடத்தல் தடுப்புப்பிரிவு போலீஸார் நடவடிக்கை எடுக்க வேண்டும். மத்திய அரசின் உதவியுடன் ஆஸ்திரேலிய அரசுக்குத் தகவல்களைத் தெரியப் படுத்தினால், சிலையை விரைவாக மீட்டு விட முடியும். ஆஸ்திரேலிய ஆர்ட் கேலரி அமைப்பினர், இந்தச் சிலைகளை சில வருடங் களுக்கு தங்கள் கேலரியில் வைத்திருக்க அவகாசம் கோரக்கூடும். அதற்கு அசைந்துகொடுக்காமல், உடனடியாக மீட்டுவர வேண்டும்’’ என்றார்.

- பி.ஆண்டனிராஜ்
படங்கள்: எல்.ராஜேந்திரன்