Published:Updated:

சென்னையில் வரும் 9ஆம் தேதி மீன் திருவிழா!

சென்னையில் வரும் 9ஆம் தேதி மீன் திருவிழா!
சென்னையில் வரும் 9ஆம் தேதி மீன் திருவிழா!
சென்னையில் வரும் 9ஆம் தேதி மீன் திருவிழா!

சென்னை: சென்னை தீவுத் திடலில் வரும் 9ஆம் தேதி முதல் நான்கு நாட்கள் மீன் திருவிழா நடக்கிறது. அந்த விழாவில் விதவிதமான மீன் உணவு பொருட்களை பொதுமக்கள் சாப்பிடலாம். அதோடு, கலர் மீன் வளர்ப்போருக்கு போட்டிகளும் அங்கு நடத்தப்படுகிறது.

தமிழகத்தில் கடந்த தி.மு.க. ஆட்சியின்போது மாநிலங்களவை உறுப்பினரான கனிமொழியின் ஏற்பாட்டில், ‘சென்னை சங்கமம்’ நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன. கிராமப்புற கலைஞர்களின் கலை நிகழ்ச்சிகளுடன் விதவிதமான காரசாரமான கிராமிய உணவுகள் வழங்கப்பட்டன. ஃபாஸ்ட் ஃபுட் கலாசாரத்துக்குப் பழகிப்போன சென்னைவாசிகள், கிராமிய உணவு வகைகளை ஒரு கை பார்த்தனர். இப்போது சென்னைவாசிகளுக்கு காரசாரமான, விதவிதமான மீன் உணவுகளை ருசிக்கும் வாய்ப்பு கிடைத்திருக்கிறது.

ஹைதராபாத்தில் உள்ள தேசிய மீன்வள மேம்பாட்டு வாரியம், தமிழ்நாடு மீன் வளர்ச்சிக் கழகம் ஆகியவை சார்பில், ஒரு கோடி ரூபாய் செலவில் இந்த விழா நடத்தப்படுகிறது. சென்னை தீவுத் திடலில் வரும் 9ஆம் தேதி தொடங்கி நான்கு நாட்கள் இந்த விழா நடக்கிறது. தேசிய அளவிலான இந்த மீன் திருவிழா, முதன்முதலாக சென்னையில் நடைபெறுகிறது.

இந்த மீன் திருவிழாவில் பல்வேறு வகையான கலர் மீன்கள் பொதுமக்கள் பார்வைக்கு வைக்கப்படுகிறது. மீன்கள் மற்றும் மீன் உணவு பொருள்கள் விற்பனையும், மீன் உணவு சமையல் போட்டிகள், கலர் மீன் வளர்ப்போருக்கான போட்டிகள் என்று பல அம்சங்கள் விழாவில் இடம் பெறுகிறது.

##~~##
கை தேர்ந்த சமையல் கலைஞர்கள் மூலம் காரசாரமான, சுவையான மீன் உணவு பொருள்களை விற்பனை செய்வதற்கான வேலைகள் தீவிரமாக நடந்து வருவதால், உணவு பிரியர்களுக்கு நல்ல வேட்டைதான்!

எம்.கார்த்தி