Published:Updated:

காடுவெட்டி குருவுக்கு காவல் நீட்டித்து நீதிபதிகள் உத்தரவு

காடுவெட்டி குருவுக்கு காவல் நீட்டித்து நீதிபதிகள் உத்தரவு
காடுவெட்டி குருவுக்கு காவல் நீட்டித்து நீதிபதிகள் உத்தரவு

செங்கல்பட்டு: காடுவெட்டி குரு ஜாமீன் கேட்டு மனு தாக்கல் செய்த 2 மனுக்களில் ஒன்றுக்கு 16ஆம் தேதி வரை காவல் நீட்டிப்பும், இன்னொரு மனுவுக்கு 17ஆம் தேதி வரை காவல் நீட்டிப்பும் செய்து நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.

காடுவெட்டி குருவுக்கு காவல் நீட்டித்து நீதிபதிகள் உத்தரவு

சமீபத்தில் பா.ம.க.வினர் நடத்திய சித்திரை பெருவிழாவில் வன்முறையை தூண்டும் விதமாக பேசியதற்காக கடந்த 30ஆம் தேதி மாலை காடுவெட்டி குரு மற்றும் திருக்கச்சூர் ஆறுமுகம் ஆகியோர் கைது செய்யப்பட்டனர். இவர்கள் மீது 143, 147, 188 ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து இருவரும் ஜாமீன் கேட்டு திருக்கழுக்குன்றம் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தனர்.

காடுவெட்டி குருவுக்கு காவல் நீட்டித்து நீதிபதிகள் உத்தரவு

அந்த மீதான விசாரணை இன்று வந்தது. மனுவை விசாரித்த நீதிபதி சிவா, இருவரையும் வரும் 16ஆம் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவிட்டார்.

##~~##
இதையடுத்து 2012ஆம் ஆண்டு தாகம்பூர், பணங்காட்டுகுப்பம் என்ற இடத்தில் நடந்த பொதுக்கூட்டத்தில் வன்முறையை தூண்டும் விதமாக பேசியதற்காக காடுவெட்டி குரு மீது ஏற்கனவே வழக்கு பதியப்பட்டது. இதற்காகவும் தற்போது கைது செய்யப்பட்டிருக்கும் குரு, ஜாமீன் கேட்டு செங்கல்பட்டு கோர்ட்டில் மனு தாக்கல் செய்திருந்தார்.
காடுவெட்டி குருவுக்கு காவல் நீட்டித்து நீதிபதிகள் உத்தரவு

அந்த மனுவும் இன்று விசாரணைக்கு வந்ததால், திருக்கழுக்குன்றம் நீதிமன்றத்திலிருந்து குருவை செங்கல்பட்டு கோர்ட்டுக்கு போலீசார் அழைத்து வந்தனர். அங்கு மனுவை விசாரித்த நீதிபதி, குருவை வரும் 17ஆம் தேதி நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவிட்டார்.

-பா.ஜெயவேல்