Published:Updated:

`காய்ச்சலுக்கு மருந்து கொடுப்போம்; ஊசியும் போடுவோம்!' - சிக்கிய 2 போலி டாக்டர்கள் வாக்குமூலம்

`காய்ச்சலுக்கு மருந்து கொடுப்போம்; ஊசியும் போடுவோம்!' - சிக்கிய 2 போலி டாக்டர்கள் வாக்குமூலம்
`காய்ச்சலுக்கு மருந்து கொடுப்போம்; ஊசியும் போடுவோம்!' - சிக்கிய 2 போலி டாக்டர்கள் வாக்குமூலம்

பொதுமக்களின் தொடர் புகார்களின் காரணமாக, நாமகிரிப்பேட்டை அருகே மருந்துக்கடை நடத்தி வந்த  போலி மருத்துவர்கள் கைது செய்யப்பட்டனர்.

நாமக்கல் மாவட்டம், பிள்ளாநல்லூர் அருகில் உள்ள நாமகிரிப்பேட்டையில் கடந்த 5 ஆண்டுகளாக `மாருதி மெடிக்கல்ஸ்' என்ற பெயரில் தமிழ்செல்வன், இளவரசன் ஆகிய இருவரும் மருந்துக்கடை நடத்தி வந்தனர். காய்ச்சல் மற்றும் சளிக்கு மருந்துகள் கொடுப்பது, ஊசி போடுவது என அடிப்படை மருத்துவங்களையே பார்த்து வந்துள்ளனர். சிலருக்கு அரசு மருத்துவமனையில் போய் சிகிச்சை பெற்றுக்கொள்ளுமாறும் கூறி வந்துள்ளனர். இங்கு மருத்துவம் பார்த்து வந்த சிலருக்கு நோய் குணமாகாமல் போக, பொதுமக்கள் சிலர் சந்தேகமடைந்தனர்.

இதனால் மாவட்ட சுகாதார இயக்குநரிடம் பாதிக்கப்பட்டவர்கள் புகார் அளித்தனர். இதைத்தொடர்ந்து, நாமக்கல் மாவட்ட சுகாதார இணை இயக்குநர் உஷா மற்றும் மருத்துவர் குழு சந்தேகப்படும் அந்த மருந்துக்கடையை நேற்று ஆய்வு செய்தனர். முறையாக மருத்துவம் படிக்காமல் அலோபதி சிகிச்சை அளிப்பது தெரியவந்தது. இதையடுத்து, இரண்டு பேரும் மகிரிப்பேட்டை போலீஸாரிடம்  ஒப்படைக்கப்பட்டனர். அவர்களிடம் போலீஸார் விசாரணை நடத்தினர்.