Published:Updated:

`அவர்கள் ஒரு எஃப்.ஐ.ஆர்-கூட போடவில்லை! - சர்ச்சைக்கு விளக்கமளித்த பொன்.மாணிக்கவேல்

`அவர்கள் ஒரு எஃப்.ஐ.ஆர்-கூட போடவில்லை! - சர்ச்சைக்கு விளக்கமளித்த பொன்.மாணிக்கவேல்
`அவர்கள் ஒரு எஃப்.ஐ.ஆர்-கூட போடவில்லை! - சர்ச்சைக்கு விளக்கமளித்த பொன்.மாணிக்கவேல்

என் மீது புகார் அளித்தவர்கள் மீது பரிதாபம்தான் வருகிறது எனப் பொன்.மாணிக்கவேல் தெரிவித்துள்ளார். 

`அவர்கள் ஒரு எஃப்.ஐ.ஆர்-கூட போடவில்லை! - சர்ச்சைக்கு விளக்கமளித்த பொன்.மாணிக்கவேல்

சிலைக்கடத்தல் தடுப்புப் பிரிவு ஐ.ஜி.யாகப் பணியாற்றிவந்த பொன்.மாணிக்கவேல் கடந்த நவம்பர் 30-ம் தேதி ஓய்வு பெற்றார். சிலைக் கடத்தல் தடுப்புப் பிரிவு வழக்குகளை சி.பி.ஐ-க்கு மாற்றுவது குறித்த வழக்கு விசாரணையின்போது, தமிழக அரசின் அரசாணையை ரத்து செய்து உத்தரவிட்டது சென்னை உயர் நீதிமன்றம்.

இந்த நிலையில் பொன்.மாணிக்கவேலுக்கு எதிராக ஏ.டி.எஸ்.பி இளங்கோ, டி.எஸ்.பி பழனிச்செல்வன், இன்ஸ்பெக்டர் பன்னீர்செல்வம் மற்றும் 12 சப்-இன்ஸ்பெக்டர்கள் நேற்று டி.ஜி.பி டி.கே.ராஜேந்திரனிடம் புகார் மனு கொடுத்தனர். இவர்களைத் தொடர்ந்து இன்று ஏ.டி.எஸ்.பி குமார், டி.எஸ்.பி சந்திரசேகர், இன்ஸ்பெக்டர் அண்ணாதுரை மற்றும் 12 சப்-இன்ஸ்பெக்டர்கள் டி.ஜி.பி-யைச் சந்தித்தனர். அவர்களும் சிலைக்கடத்தல் தடுப்புப் பிரிவில் நடந்த உள்விவகாரங்கள் குறித்து மனு கொடுத்துள்ளனர். 

`அவர்கள் ஒரு எஃப்.ஐ.ஆர்-கூட போடவில்லை! - சர்ச்சைக்கு விளக்கமளித்த பொன்.மாணிக்கவேல்

அதில், ``பொன்.மாணிக்கவேல், சிலைக்கடத்தல் வழக்குகளில் உரிய ஆவணங்கள், சாட்சிகள் இல்லாமல் சட்டத்துக்கு முரணாக வழக்குப் பதிவு செய்து புலன் விசாரணை செய்ய வற்புறுத்தியதாகவும், அவரது வற்புறுத்தலைக் கடைப்பிடிக்காத காவல் அதிகாரிகளைத் திட்டியும் மிரட்டியும் வருவதால் தங்களுக்குப் பணி மாறுதல் வேண்டும் எனக் கோரிக்கை வைத்து மனு அளித்துள்ளனர்'' என்று கூறப்பட்டுள்ளது. 

இது சிலைக்கடத்தல் வழக்குகளில் புதிய சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில், தற்போது தன் மீதான குற்றச்சாட்டுகள் குறித்து செய்தியாளர்களிடம் விளக்கமளித்தார் பொன்.மாணிக்கவேல். 

`அவர்கள் ஒரு எஃப்.ஐ.ஆர்-கூட போடவில்லை! - சர்ச்சைக்கு விளக்கமளித்த பொன்.மாணிக்கவேல்

உங்கள் மீது 21 காவலர்கள் புகார் அளித்துள்ளார்களே?

என் மீது புகார் அளித்தவர்களை நினைத்தால் பரிதாபம்தான் வருகிறது. இந்த 21 பேர் யார் என்று கூட தெரியாது. அவர்கள் முகத்தைக்கூட அவ்வளவாகப் பார்த்தது கிடையாது. இந்த 21 பேரும் இந்த 400 நாள்களில் ஒரு எப்ஃஐ. ஆர் கூடப் போடவில்லை. இன்னும் சொல்லப்போனால் ஒரு குற்றவாளியைக் கூட அவர்கள் பிடிக்கவில்லை. அவர்கள் எல்லாம் நல்லவர்கள்தான். அவர்களைப் பின்னாலிருந்து யாரோ இயக்குகிறார்கள். 

நீங்கள் திட்டியும், மிரட்டியும் வருவதால் மனஉளைச்சல் ஏற்பட்டுள்ளதாகப் புகார் கூறியுள்ளார்களே?

பந்தநல்லூர் பசுபதீஸ்வரர் வழக்கை நீதிமன்றம் எங்களிடம் ஒப்படைத்தது. இது ஒரு முக்கியமான வழக்கு. அந்த வழக்கை தற்போது புகார் கொடுத்த காவல் அதிகாரி ஒருவரிடம் கொடுத்தோம். ஆனால், அவர் 200 நாள்களுக்கு மேலாகப் பணிக்கு வரவில்லை. க்ரைம் பிரிவைப் பொறுத்தவரை கைது பண்ணுவது என்பது மிகப்பெரிய முடிவு. க்ரைம் பிரிவில் அயல்பணியில் வந்த கான்ஸ்டபிள், எஸ்.ஐ கைது நடவடிக்கையை மேற்கொள்ள முடியாது. இப்படி இருக்கும் போது 200 நாள்களுக்கு மேலாகப் பணிக்கு வராதவரை எப்படி எடுக்க முடியும். இப்போது சொல்லுங்கள் மனஉளைச்சல் யாருக்கு இருக்கிறது என்று. மக்களுடைய வரிப்பணம் எப்படி எல்லாம் வீணடிக்கப்படுகிறது எனப் பாருங்கள். இங்கு இருப்பது ஒரு சின்ன டீம். இதை வைத்துத்தான் நாங்கள் பணி புரிந்து வருகிறோம். 

`அவர்கள் ஒரு எஃப்.ஐ.ஆர்-கூட போடவில்லை! - சர்ச்சைக்கு விளக்கமளித்த பொன்.மாணிக்கவேல்

ஓ.டி. பிரிவில் பணியாற்றும் போது யாரும் டிரான்ஸ்ஃபர் கேட்டார்களா?

ஓ.டி. பிரிவில் தற்போது 208 பேர் இருக்கிறார்கள். இவர்களில் 10 டிஎஸ்பி 5 ஏடிஎஸ்பி 17 இன்ஸ்பெக்டர்கள், 47 சப்-இன்ஸ்பெக்டர்கள், இதுபோக மீதமுள்ள காவலர்கள். இந்த எண்ணிக்கையிலான காவலர்களை பயன்படுத்தி நான் கடந்த ஒரு வருடத்தில் ஒருசிலையைக்கூட பிடிக்கவில்லை. இது சத்தியம். நான் பிடித்த 19 சிலைகளில் 17 சிலைகள் அந்தந்த மாவட்ட காவலர்களை கொண்டு நானாகப் போய் பிடித்திருக்கிறேன். இதுமாதிரி கிட்டத்தட்ட 47 குற்றவாளிகளை பிடித்திருக்கிறேன். இந்தப் பெருமை எல்லாம் அந்தந்த மாவட்ட காவலர்களேயே போய்ச் சேரும். இந்த 208 பேரையும் அசிஸ்டெண்டுகளாகவே பயன்படுத்தினேன். சிலைகளைத் தூக்குவதற்கு, நிர்வகிப்பதற்காகத்தான் இவர்களைப் பயன்படுத்தினேன். இந்த 208 பேரும் வந்தபிறகும்தான் எனக்கு வெற்றி என்று கூறுவது எல்லாம் கிடையாது. இது கடமை. கடைசி மூச்சு இருக்கும் வரை பணியைச் செய்துவிட்டு இறந்துவிடுவேனே தவிர இந்த மாதிரி செய்யமாட்டேன். இவர்கள் அனைவரையும் உதவியாகப் பயன்படுத்தினேன். எல்லா வழக்குகளையும் விசாரிப்பது டிஎஸ்பி தான். எதாவது ஒரு இன்ஸ்பெக்டர் வழக்கை விசாரித்ததாகக் கூறச் சொல்லுங்கள் என் ஒருமாதச் சம்பளத்தைக் கொடுத்துவிடுகிறேன்.

நீங்கள் நிறைய பணிச்சுமை கொடுத்ததாக புகார் கொடுத்துள்ளார்கள்?

ஒரு எப்ஐஆர் போடவில்லை என்கிறேன். அப்புறம் எப்படி பணிச்சுமை கொடுப்பது. அவர்கள் புகாருக்கு ஆதாரம் இருக்கிறதா?. புகார் கூறியவர்கள் இதுவரை ஒரு பணிமாறுதல் கூட கேட்டு மனு தரவில்லை.

நீங்கள் மீட்ட சிலைகள் தொன்மையானது இல்லையா?

மீட்ட சிலைகள் அனைத்தும் தொன்மையானது என நிரூபித்துவிட்டால் புகார் கொடுத்தவர்களை டிஜிபி பணிநீக்கம் செய்வாரா? இது எல்லாம் ஒரு மாயை. எவ்வளவு சம்பளம் வாங்கியுள்ளீர்கள்; எத்தனை குற்றவாளிகளை பிடித்துள்ளீர்கள் என புகார் கொடுத்தவர்களிடம் கேளுங்கள். 

திடீரென உங்களுக்கு எதிராக எல்லாம் புகார் கொடுக்கிறார்கள் ஏன்?

எனக்கு எதிராக புகார் கொடுக்கவில்லை. என்னை நியமித்தது உயர் நீதிமன்றம். இந்த உத்தரவை எதிர்த்து சுப்ரீம் கோர்ட் சென்றார்கள். ஆனால் உச்ச நீதிமன்றம் அவர்கள் கோரிக்கையை ஏற்காததால் பின்னடைவு ஏற்படுகிறது. மனக்கவலையோடு என்னிடம் மீண்டும் பொறுப்புகளை ஒப்படைத்தார்கள். நான் வழக்குகளை விசாரிக்க ஆரம்பித்த பிறகு பல பிரச்னைகளை இழுத்துவிட்டார்கள். அதை எல்லாம் எதிர்த்து தனி மனிதனாக போராடுகிறேன்.