Published:Updated:

என்ஜினீயரிங் கவுன்சிலிங் ஜூன் 21 ல் தொடக்கம்

என்ஜினீயரிங் கவுன்சிலிங் ஜூன் 21 ல் தொடக்கம்
என்ஜினீயரிங் கவுன்சிலிங் ஜூன் 21 ல் தொடக்கம்
என்ஜினீயரிங் கவுன்சிலிங் ஜூன் 21 ல் தொடக்கம்

சென்னை: வருகிற ஜூன் 12 ஆம் தேதி ரேங்க் பட்டியல் வெளியிடப்பட்டு, என்ஜினீயரிங் கவுன்சிலிங் ஜூன் 21 ஆம் தேதி தொடங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் (பொறுப்பு) காளிராஜ் செய்தியாளர்களிடம் கூறுகையில்,"இந்த வருடம் 2 1/2 லட்சம் விண்ணப்பங்கள் அச்சடிக்கப்பட்டுள்ளன. கடந்த ஆண்டை காட்டிலும் 50 ஆயிரம் கூடுதலாக அச்சடிக்கப்பட்டுள்ளன. இந்த ஆண்டு புதிதாக 12 முதல் 20 கல்லூரிகள் தொடங்குவதற்கு வாய்ப்புகள் உள்ளன. மொத்தம் 2 லட்சம் இடங்கள் நிரப்பப்படும்.

என்ஜினீயரிங் கவுன்சிலிங் ஜூன் 21 ஆம் தேதி தொடங்கி ஜூலை 30 ஆம் தேதி வரை நடைபெறுகிறது. ரேண்டம் எண் ஜூன் 5 ஆம் தேதியும் ரேங்க் பட்டியல் 12 ஆம் தேதியும் வெளியிடப்படும். ஆகஸ்டட் 1 ஆம் தேதி என்ஜினீயரிங் கல்லூரிகள் திறக்கப்படும். பி.இ.ஆர்க்கிடெக் படிப்பிற்கு தனியாக அறிவிப்பு வெளியிடப்படும். அப்போது விண்ணப்பிக்க வேண்டும்.

##~~##
கட்டமைப்பு வசதியை மேம்படுத்த கல்லூரிகளுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. அவற்றை நிவர்த்தி செய்யாவிட்டால் இடங்கள் எண்ணிக்கை குறைக்கப்படும். தற்போது தமிழ்நாட்டில் மொத்தம் 552 பொறியியல் கல்லூரிகள் உள்ளன. இதில் 522 தனியார் சுயநிதி என்ஜினீயரிங் கல்லூரிகளாகும்" என்றார்.