Published:Updated:

`சன்னிதானத்திற்குச் சென்றே தீருவோம்' - பம்பையில் தடுத்து நிறுத்தப்பட்ட தமிழக பெண்கள் சபதம்!

`சன்னிதானத்திற்குச் சென்றே தீருவோம்' - பம்பையில் தடுத்து நிறுத்தப்பட்ட தமிழக பெண்கள் சபதம்!
`சன்னிதானத்திற்குச் சென்றே தீருவோம்' - பம்பையில் தடுத்து நிறுத்தப்பட்ட தமிழக பெண்கள் சபதம்!

சன்னிதானத்திற்கு சென்றேதீருவோம், திரும்பிச்செல்லும் எண்ணம் இல்லை எனத் தமிழ்நாட்டில் இருந்து சபரிமலை சென்றுள்ள மனிதி அமைப்பினர் தெரிவித்தனர். தொடர்ந்து ஆறு பெண்கள் பம்பையில் தடுத்துநிறுத்தப்பட்டுள்ளனர்.

அனைத்து வயது பெண்களும் சபரிமலை செல்லலாம் என்ற சுப்ரீம் கோர்ட் தீர்ப்பை அடுத்து சபரிமலையில் சில இளம் பெண்கள் செல்ல முயன்றனர். அவர்களை ஐயப்ப பக்தர்கள் தடுத்து நிறுத்தி சரணகோஷம் எழுப்பினர். இதையடுத்து அவர்கள் திரும்பிச்சென்றனர். கார்த்திகை 1-ம் தேதி மண்டல மகரவிளக்கு பூஜைக்காக சபரிமலை நடை திறந்தபோது சில பெண்கள் சபரிமலை செல்ல முயன்று, சரணகோஷ போராட்டத்தால் பாதியில் திரும்பினர். அதன்பிறகு இளம் பெண்கள் யாரும் சபரிமலை செல்ல முயற்சிக்கவில்லை. இந்த நிலையில்  தமிழ்நாட்டைச் சேர்ந்த மனிதி அமைப்பைச் சேர்ந்த ஆறு இளம் பெண்கள் சபரிமலை செல்வதற்காக இன்று அதிகாலை பம்பை சென்றனர். காவல்துறையினரிடம் பாதுகாப்பு கேட்டனர்.

அவர்களுக்கு இருமுடி கட்ட பூசாரிகள் முன்வராததால் அவர்களே சுயமாக இருமுடிக்கட்டி சன்னிதானம் செல்ல முயன்றனர். அவர்களை ஐயப்ப பக்தர்கள் சுமார் 2 மணி நேரமாகத் தடுத்து நிறுத்தி சரணகோஷ போராட்டம் நடத்தி வருகின்றனர். இதுகுறித்து மனிதி அமைப்பைச் சேர்ந்த செல்வி கூறுகையில், "நாங்கள் சபரிமலை சன்னிதானத்திற்குச் சென்றே தீருவோம். இங்கிருந்து திரும்பிச் செல்லும் எண்ணம் இல்லை" என்றார்.