Published:Updated:

அனைத்து சாதியினரும் அர்ச்சகர்: ஆக.1ல் சிறையை நிரப்புகிறார் கி.வீரமணி

அனைத்து சாதியினரும் அர்ச்சகர்:  ஆக.1ல் சிறையை நிரப்புகிறார் கி.வீரமணி
அனைத்து சாதியினரும் அர்ச்சகர்: ஆக.1ல் சிறையை நிரப்புகிறார் கி.வீரமணி

ராஜபாளையம்: அனைத்து சாதியினரும் அர்ச்சகர் ஆவதற்கான உரிமையை நிலைநாட்ட ஆகஸ்ட் 1ம் தேதி சிறை நிரப்பும் போராட்டம் நடத்தப்படும் என்று தி.க. தலைவர் கி.வீரமணி தெரிவித்துள்ளார்.

அனைத்து சாதியினரும் அர்ச்சகர்:  ஆக.1ல் சிறையை நிரப்புகிறார் கி.வீரமணி

ராஜபாளையத்தில் கடந்த ஞாயிற்றுக்கிழமை தி.க. இளைஞர் அணி மாநாடு நடந்தது. இதில் தி.க. தலைவர் கி.வீரமணி, தி.மு.க. பொருளாளர் ஸ்டாலின் உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டு பேசினர்.

மாநாட்டில், கி.வீரமணி பேசுகையில், " தந்தை பெரியார் இறுதியாக அறிவித்த போராட்டம் அனைத்து சாதியினருக்கும் அர்ச்சகர் உரிமைக்கான போராட்டமாகும். தமிழன் கட்டிய கோயிலுக்குத் தமிழன் அர்ச்சகனாகப் போக முடியாது. இது மதத்தின் பெயரால் திணிக்கப்பட்டுள்ள தீண்டாமையாகும். இதனை ஒழிக்க தந்தை பெரியார் புறப்பட்டார். அந்தப் போராட்டக் களத்திலேயே தன் இறுதி மூச்சைத் துறந்தார். கழகம் தொடர்ந்து இந்த உரிமைக்காகப் போராடிக் கொண்டு வருகிறது.
 

அனைத்து சாதியினரும் அர்ச்சகர்:  ஆக.1ல் சிறையை நிரப்புகிறார் கி.வீரமணி

அனைத்து சாதியினருக்கும் அர்ச்சகர் உரிமைக்கான சட்டத்தை முதல்வர் கலைஞர் நிறைவேற்றிக் கொடுத்தார் என்றாலும் அதை எதிர்த்து உச்ச நீதிமன்றம் சென்று முடக்கி வருகின்றனர். உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு சார்பில் மனு ஒன்றைத் தாக்கல் செய்துள்ளனர். நீதிமன்றத்துக்கு வெளியே சுமுகமாகத் தீர்த்துக் கொள்கிறோம் என்று கூறியுள்ளனர். அந்தச் சுமுகம் என்றால் என்ன? விளக்கம் தேவை.
 

அனைத்து சாதியினரும் அர்ச்சகர்:  ஆக.1ல் சிறையை நிரப்புகிறார் கி.வீரமணி

இரண்டு மாதங்கள் இதுபற்றி தமிழ்நாட்டில் சுற்றுப் பயணம் செய்து கடுமையான பிரச்சாரத்தில் ஈடுபடுவோம். லட்சியம் நிறைவேறும் வரை ஓய்ந்திட மாட்டோம். ஆகஸ்டு முதல் தேதி என்பது தந்தை பெரியார் கண்ணோட்டத்தில் திராவிடர் கழகம், போராட்டத்தை நடத்தும் வரலாற்றுக் குறிப்பாகும். அதே போல வரும் ஆகஸ்டு முதல் தேதி திராவிடர் கழகம் போராட்டத்தில் குதிக்கும். அது சிறை நிரப்பும் போராட்டமாக இருக்கும்" என்றார்.
 

அனைத்து சாதியினரும் அர்ச்சகர்:  ஆக.1ல் சிறையை நிரப்புகிறார் கி.வீரமணி

மாநாட்டில் தி.மு.க. பொருளாளர் மு.க.ஸ்டாலின் பேசுகையில், 'நசுக்கப்பட்ட மக்களுக்காகப் பாடுபடுவதில் திராவிடர் கழகத்துக்கே முதலிடம். திராவிடர் கழக இளைஞரணி 1978இல் தொடங்கப்பட்டுள்ளது. தி.மு.க. இளைஞரணி 1980இல் மதுரையில் ஜான்சி ராணி பூங்காவில்  தொடங்கப்பட்டது. பகுத்தறிவுக் கொள்கைகளை நெஞ்சில் ஏந்தி, ஜாதி மறுப்புத் திருமணங்கள், விதவைத் திருமணங்கள் வரதட்சனையற்ற திருமணங்களைச் செய்து கொள்வது என்பதெல்லாம் அறிவார்ந்த முற்போக்குத்தனம் கொண்டதாகும்" என்றார்.
 

அனைத்து சாதியினரும் அர்ச்சகர்:  ஆக.1ல் சிறையை நிரப்புகிறார் கி.வீரமணி

மாநாட்டில், மதமற்ற உலகைப் படைப்போம், ஆண் பெண் சமத்துவத்தை உருவாக்குவோம், பெண்கள் மீதான பாலியல் வன்முறையை கடுமையான சட்டங்களின் மூலம் தடுக்கப்படவேண்டும். சாதி தீண்டாமைகளை ஒழிக்க, சாதி வெறியைத் தூண்டும் சக்திகள் மீது கடுமையான சட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். சாதி மறுப்புத் திருமணம், விதவைத் திருமணம், மணமுறிவு பெற்றவர்களோடு திருமணம், மாற்றுத் திறனாளிகளோடு திருமணம் எனும் கொள்கையைத் தீவிரமாகச் செயல்படுத்துவது. அனைத்து சாதியினரும் அர்ச்சகர் ஆகும் உரிமையைப் பெற்றுத்தர மே, ஜூன் மாதங்களில் தமிழ்நாடு முழுவதும் பிரசாரம் மேற்கொள்வது, ஜூலை மாதத்தில் போராட்டம் நடத்துவது. ஈழத் தமிழர் படுகொலைக்குக் காரணமானவர்கள் மீது சட்டப்படியான நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். எந்தவிதமான அரசியல் தீர்வை ஈழ மக்கள் விரும்புகிறார்கள் என்பதற்கு உலகெங்கும் வாழும் ஈழத் தமிழர்கள் மத்தியில் பொது வாக்கெடுப்புக்கு வழி செய்யவேண்டும். கச்சத்தீவை மீட்க வேண்டும். தாழ்த்தப்பட்டவர்கள் மற்றும் பிற்படுத்தப்பட்டவர்களுக்கு மீண்டும் ஆணையம் அமைக்க வேண்டும். கல்வியை மாநில பட்டியலில் சேர்க்க வேண்டும். வேலைவாய்ப்பை அடிப்படை உரிமையாக்க வேண்டும். சேது சமுத்திர திட்டத்தை நிறைவேற்ற வேண்டும் என்பது உள்பட 20 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.