Published:Updated:

ஆஹான்

ஆஹான்
பிரீமியம் ஸ்டோரி
News
ஆஹான்

ஆஹான்

ஆஹான்

 Ilango Krishnan
இரண்டு வருடங்களுக்கு முன்பு ஏ.டி.எம்-ல் காசு எடுத்து வாடகைக்காக வீட்டுக்காரரிடம் கொடுத்தேன். அவர், “இந்தக் காசு எல்லாம் செல்லாதாம்பா... வேற கொடு” என்றார். “எல்லாம் புது ஐநூறு ரூபாய் நோட்டுங்க” என்றேன். “இப்பதானே மோடி டி.வி-யில் சொன்னார். பார்க்கலியா...” என்றபடி நோட்டுகளைக் கையில் திணித்துச் சென்றார். எனக்குப் பதற்றமாகிவிட்டது. நாளை காலை அறுவைச் சிகிச்சைக்கு காசு கட்ட வேண்டும். நோட்டுகளை மாற்ற டாஸ்மாக்குக்கும், பெட்ரோல் பங்குக்கும் ஓடினேன். ஒருவரும் வாங்கவில்லை. மறுநாள் மருத்துவமனையில் சொன்னேன். அங்கும் குழப்பம். ஒரு முதிய பெண்மணி மடார் மடார் என்று தலையில் அடித்துக்கொண்டு அழுதார். எனக்குக் கோபம், எரிச்சல், வருத்தம், பதற்றம் எனக் கலவையான உணர்வுகள். அதன்பிறகு மருத்துவமனையில் இருந்த பதினைந்து நாள்களும் காசுக்காக ஏ.டி.எம் தோறும் நாயாய் அலைந்தது கொஞ்ச நஞ்சமல்ல. பித்துப் பிடித்தது போல் விரக்தியில் இருந்தேன். # டீமானிடைசேஷன் நினைவுகள்

ஆஹான்

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

Swara vaithee
இலவசத்தையும் ஒழியுங்கள் என்பதுதான் கார்ப்பரேட் கிரிமினல்களின் தாரக மந்திரம்.

 Abdul Hameed Sheik Mohamed
சர்காரையும் விஜய்யையும் அமைச்சர் ஜெயகுமார் சராமாரியாகத் தாக்குகிறார். ஒரு குசும்பு பிடிச்ச செய்தியாளர், ‘‘இன்றைக்கு பணமதிப்பு நீக்கம் அறிவிச்ச இரண்டாம் வருஷம். இதைப்பத்தி என்ன நினைக்கிறீங்க?’’ என்கிறார். சட்டெனெ பதுங்கும் ஜெயகுமார், “அது வந்து... நல்லதா கெட்டதா என்பதை மக்கள்தான் முடிவு செய்ய வேண்டும்’’ என்கிறார். டீமானிடைசேஷன் பற்றி முடிவெடுக்கும் மக்கள், ஏன் சர்கார் பற்றி மட்டும் முடிவெடுக்க மாட்டார்களா? மக்கள் டெங்குவிலும் பன்றிக்காய்ச்சலிலும் செத்துக்கொண்டிருக்கும்போது, ஓர் அமைச்சரவையே சினிமாவைப் பற்றியும் ஒரு நடிகரைப் பற்றியும் பேசிக்கொண்டிருக்கும் கேவலம் வேறு எந்த மாநிலத்திலாவது உண்டா?

ஆஹான்

பூ.கொ.சரவணன்
இலவசங்களை மக்கள் மயக்குத் திட்டங்கள் என வசைபாடுகிறார்கள். கல்விக்கடனில் படித்த எனக்கெல்லாம் மடிக்கணினிப் பெருங்கனவு. மடிக்கணினி இல்லாமல் கைவலிக்க பொறியியல் பாடங்களைக் கையால் எழுதிய வலிகளை, நீங்கள் இலவசம் என நகையாடுகிற அரசாங்க மடிக்கணினிதான் போக்கியது. அதன் உதவியோடுதான் என் குடிமைப்பணித்தேர்வு முயற்சி சாத்தியமானது. ‘இலவச மருத்துவக்கல்வி இல்லாமல் போயிருந்தால் நானெல்லாம் மருத்துவமே படிக்க முடிந்திருக்காது’ என்றார் மனநல மருத்துவத்தில் சாதனைகள் புரிந்த சாரதா மேனன்.

இலவச மிதிவண்டிகள் பெண்களின் பொருளாதார விடுதலை, வேலைவாய்ப்பை எப்படியெல்லாம் அதிகரித்தன என்பது குறித்த தீர்க்கமான ஆய்வுகள் உண்டு. அவை இலவசங்கள் அல்ல. சமூகக்கடமை. ஆண்களை ஒவ்வொரு நகர்விற்கும் நம்பிக்கொண்டிருக்க வேண்டிய வேதனையிலிருந்து விடுதலை தந்த அரிய முன்னெடுப்பு மிதிவண்டிகள். உல்லாச மகிழுந்துகளில் வலம் வருகிறவர்களுக்கு இவை மயக்குத்திட்டங்களாக தெரிவதில் ஆச்சர்யமில்லை.

சமூகத்தேர்வு எனப் பேராசிரியர் அமர்த்தியா சென் குறிப்பிடும் மக்களுக்கான சரியான தேர்வுகள் தமிழ்நாட்டில் செயல்திறத்தோடு கொண்டு சேர்க்கப்படுவது ஒன்றும் விபத்தில்லை. இவற்றை ‘ஓசி’ எனக் கொச்சைப்படுத்துபவர்கள் தட்டையான பார்வை கொண்டவர்கள். கவுன்சிலிங்கிற்கு கட்ட ஐயாயிரமா என வாய்பிளந்த முதல் தலைமுறை பட்டதாரிகள் எழுவது ஏன் என அறிவீர்களா? ஊழல் ஒழிப்பு என்கிற ஜிகினாத்தாளில் சுற்றி ‘நீங்கள் பிச்சைக்காரர்கள்’ என தரப்படும் மசாலா அரைவேக்காடானது, அருவருப்பானது.

ஆஹான்

HAJAMYDEENNKS
இந்திய பேட்ஸ்மேன்களைப் பிடிக்காவிட்டால் இந்தியாவில் இருக்காதீர்கள் - விராட் கோலி

# விராட் கோலிக்குள்ளும் ஒரு ஹெச்.ராஜா, ஒரு சீமான் இருக்கிறார்கள்!

19SIVA25
அயோத்தியில் தசரத ராஜா பெயரில் மருத்துவக் கல்லூரியும், ராமர் பெயரில் விமான நிலையமும் கட்டப்படும் - முதல்வர் யோகி ஆதித்யநாத்.

முதல்ல ஹாஸ்பிட்டல்ல ஆக்சிஜன் சிலிண்டரை வாங்கி வைங்க சென்றாயன்!

tamil_twtz

புல்லட் ரயில்
- ஜப்பான் ஹே
ரஃபேல் ஏர்கிரேஃப்ட்
- பிரான்ஸ் ஹே
படேல் சிலை
- சைனா ஹே
இந்தியா ?
- பக்கோடா ஹே.

mufthimohwwamed1

தியேட்டரில் டிக்கெட்டை ஆயிரம் ரூபாய்க்கு விற்பது சட்ட விரோதம் இல்லையென்றால்...
10 ரூபாய் தின்பண்டங்கள் 30 ரூபாய்க்கு விற்பது சட்ட விரோதம் இல்லையென்றால்...
தமிழ் ராக்கர்ஸ் இணையதளத்தில் புதியபடத்தை விடுவது மட்டும் எப்படிச் சட்ட விரோதமாகும்?

ஆஹான்

yugarajesh2
வருஷா வருஷம் தன் சாதனையைத் தானே முறியடிக்கிறது

விராட் கோலியும் டாஸ்மாக்கும் மட்டும்தான்.

Fazil_Amf
கடந்த நான்கு நாள்களில் ரூ.602 கோடிக்கு மது விற்பனை - டாஸ்மாக் நிர்வாகம் அறிவிப்பு

# இதுக்குதான் திங்கள்கிழமை லீவு விட்டீங்களா!

ajmalnks

இலவச மின்சாரம், டி.வி., மிக்ஸி, கிரைன்டர், பள்ளிச்சீருடை, மிதிவண்டி, பஸ் பாஸ் போன்றவை அவசியம்தானா என்ற கேள்வியை விவசாயிகளிடமும் நூறுநாள் வேலை பார்க்கும் ஏழைகளிடமும், பள்ளிக்குப் படியில் தொங்கிக்கொண்டும் சைக்கிளிலும் சென்று படிக்கும் மாணவர்களிடத்திலும் கேளுங்கள்.