Published:Updated:

களிமண் எடுக்கச் சென்ற மாட்டுவண்டித் தொழிலாளர்கள் மீது துப்பாக்கிச் சூடு! - விழுப்புரம் அருகே பரபரப்பு

விழுப்புரம் அருகே களிமண் ஏற்றச் சென்றபோது மாட்டுவண்டித் தொழிலாளர்கள் மீது துப்பாக்கி சூடு நடத்தப்பட்டதை கண்டித்து கிராம மக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுப்பட்டனர்.

களிமண் எடுக்கச் சென்ற மாட்டுவண்டித் தொழிலாளர்கள் மீது துப்பாக்கிச் சூடு! - விழுப்புரம் அருகே பரபரப்பு

விழுப்புரம்  மாவட்டம் கெடார் கிராமத்தை சேர்ந்த மாட்டு வண்டி தொழிலாளர்கள் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு மண் பாண்டம் செய்வதற்காகக் களிமண் எடுக்க வீராமூர் ஏரிக்கு மாட்டு வண்டியுடன் சென்றுள்ளனர். அதிகாலை 6 வண்டிகளை சுற்றி வளைத்த காவல்துறையினர் திடீரென துப்பாக்கிச் சூடு நடத்தியதாகக் கூறப்படுகிறது. அதில் மாடு ஒன்றுக்கு வாய்ப் பகுதியில் குண்டு பாய்ந்து படுகாயம் அடைந்தது. மாட்டு வண்டி தொழிலாளர்கள் தப்பியோடியுள்ளனர்.

களிமண் எடுக்கச் சென்ற மாட்டுவண்டித் தொழிலாளர்கள் மீது துப்பாக்கிச் சூடு! - விழுப்புரம் அருகே பரபரப்பு

இதனைக் கண்டித்து விழுப்புரம் - திருவண்ணாமலை சாலையில் மாட்டுவண்டி தொழிலாளர்கள் படுகாயம் அடைந்த மாட்டுடன், மாட்டு வண்டிகளை சாலையில் நிறுத்தி கிராம மக்கள் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். தகவல் அறிந்து வந்த காவல்துறையினர் மறியலில் ஈடுப்பட்டவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். நரிக்குறவர்கள் துப்பாக்கியால் சுட்டதாக காவல்துறையினர் தெரிவித்தனர். அதனை ஏற்காத கிராம மக்கள் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக மறியல் போராடத்தைத் தொடர்ந்தனர். பின்னர், அங்கு வந்த செஞ்சி காவல் துணைக் கண்காணிப்பாளர் வினோதினி, பாதிக்கப்பட்டவர்களிடம், மறியலில் ஈடுபட்டவர்களிடமும் பேச்சுவார்த்தை நடத்தி உரிய விசாரணை செய்து தகுந்த நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தார். அதன்பின்னரே மறியல் போராட்டத்தைக் கைவிட்டு கிராம மக்கள் கலைந்து சென்றனர். இச்சம்பவம் குறித்து மாட்டின் உரிமையாளர் கிருஷ்ணமூர்த்தி மற்றும் மாட்டு வண்டி தொழிலாளர்களிடம் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் ஜெயக்குமார் நேரில் விசாரணை நடத்தி வருகிறார்.