Published:Updated:

மோசடி செய்த மயிலம் சிட்பண்ட்ஸ் பெண் இயக்குனர் கைது

மோசடி செய்த மயிலம் சிட்பண்ட்ஸ் பெண் இயக்குனர் கைது
மோசடி செய்த மயிலம் சிட்பண்ட்ஸ் பெண் இயக்குனர் கைது
மோசடி செய்த மயிலம் சிட்பண்ட்ஸ் பெண் இயக்குனர் கைது

சென்னை: ஏலச்சீட்டு மோசடி வழக்கில் மயிலம் சிட்பண்ட்ஸ் நிறுவனத்தின் பெண் இயக்குனரை போலீசார் கைது செய்து புழல் சிறையில் அடைத்தனர்.

சென்னை தண்டையார்ப்பேட்டை, கார்ப்பரேஷன் காலனியை சேர்ந்தவர் இளம்பூரணன் (45). இவரது மனைவி லாவண்யா (44). இவர்கள், மயிலம் சிட்பண்ட்ஸ் பிரைவேட் லிமிடெட் என்ற பெயரில் ஏலச்சீட்டு நிறுவனம் நடத்தி வந்தனர். இவர்கள் நடத்தும் ஏலச்சீட்டில் பொதுமக்கள் ஏராளமானோர் சேர்ந்தனர்.

250க்கும் மேற்பட்டவர்கள் ஏலச்சீட்டுக்குரிய பணத்தை முழுவதும் செலுத்தியும், அவர்களுக்கு பணத்தை திருப்பித் தராமல் இளம்பூரணன் இழுத்தடித்து வந்தார். இந்த நிலையில், மயிலம் சிட்பண்ட்சில் ரூ.7.60 லட்சம் ஏலச்சீட்டு கட்டிய ஏ.சுந்தரி என்பவர் கடந்த 2-ந்தேதி பணத்தை திருப்பிக்கேட்டார்.

ஆனால், அவரை மறுநாள் வந்து பணத்தை பெற்றுக்கொள்ளும்படி இளம்பூரணனும், அவரது மனைவி லாவண்யாவும் கூறினார்கள். மறுநாள் சென்றபோது, சிட்பண்ட்ஸ் நிறுவனத்தை இழுத்து மூடப்பட்டு இருந்தது.

இதனால் அதிர்ச்சியடைந்த சுந்தரி, இதுகுறித்து சென்னை போலீஸ் கமிஷனர் ஜார்ஜிடம் புகார் மனு கொடுத்தார். அதேபோல, இந்த சிட்பண்ட்சில் பணம் செலுத்தி ஏமாந்த 45-க்கும் மேற்பட்டவர்கள் போலீஸ் கமிஷனரிடம் புகார் செய்தனர்.

##~~##
இந்த நிலையில், தலைமறைவான லாவண்யா, பெரம்பூரில் உள்ள அவரது பெற்றோர் வீட்டில் இருப்பது தெரியவந்தது. இதையடுத்து, பணம் செலுத்தி ஏமாந்தவர்கள் பெரம்பூர் சென்று, அங்கு இருந்த லாவண்யாவை போலீசில் பிடித்து ஒப்படைத்தனர்.
இதையடுத்து லாவண்யாவிடம் சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் விசாரணை நடத்தினர். சுந்தரி என்ற பெண் கொடுத்த புகாரின் அடிப்படையில், மத்திய குற்றப்பிரிவு இன்ஸ்பெக்டர் எஸ்.ஆர்.தயாள் வழக்குப்பதிவு செய்தார்.
பின்னர் லாவண்யாவை கைது செய்த போலீசார், அவரை சென்னை ஜார்ஜ் டவுன் கோர்ட்டில் ஆஜர்படுத்தி, புழல் சிறையில் அடைத்தனர்.