Published:Updated:

மேலும் 3 கட்டடங்களுக்கு சீல்: கோவையில் தொடரும் நடவடிக்கை

மேலும் 3 கட்டடங்களுக்கு சீல்: கோவையில் தொடரும் நடவடிக்கை
மேலும் 3 கட்டடங்களுக்கு சீல்: கோவையில் தொடரும் நடவடிக்கை

கோவை: கோவையில் விதிமுறை மீறிய கட்டடங்களுக்கு சீல் வைக்கும் பணி கடந்த 9வது நாளாக நடைபெற்று வருகிறது. கோவை ஆர்.எஸ்.புரம் பகுதியில் விதிமுறை மீறி கட்டப்பட்டிருந்த 3 கட்டடங்களுக்கு இன்று சீல் வைக்கப்பட்டது.

மேலும் 3 கட்டடங்களுக்கு சீல்: கோவையில் தொடரும் நடவடிக்கை

கடந்த மாதம் 25ஆம் தேதி கோவை, அவினாசி சாலையில் உள்ள அடுக்குமாடி வணிக வளாகத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் 4 பெண்கள் உயிரிழந்தனர். இதனையடுத்து விதிமுறை மீறிய கட்டடங்கள் மீதான நடவடிக்கையினை அதிகாரிகள் தீவிரப்படுத்தியுள்ளனர். முதல் கட்டமாக விதிமுறை மீறியதாக 201 கட்டடங்கள் கண்டறியப்பட்டது.

மேலும் 3 கட்டடங்களுக்கு சீல்: கோவையில் தொடரும் நடவடிக்கை

இதைத்தொடர்ந்து கோவையில் விதிமுறை மீறிய கட்டடங்களுக்கு சீல் வைக்கும் பணி இன்று 9வது நாளாக நடைபெற்று வருகிறது. இன்று காலை முதல் மாநகராட்சி அதிகாரிகளும், உள்ளூர் திட்ட குழும அதிகாரிகளும் இணைந்து சீல் வைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

மேலும் 3 கட்டடங்களுக்கு சீல்: கோவையில் தொடரும் நடவடிக்கை

ஏற்கனவே 56 கட்டடங்களுக்கு சீல் வைக்கப்பட்டுள்ள நிலையில், இன்று பிரபல

##~~##
எலக்ட்ரானிக்ஸ் பொருட்கள் விற்பனை செய்யும் நிறுவனமான விவேக்ஸ் இயங்கி வந்த கட்டடம் உள்ளிட்ட மூன்று கட்டடங்களுக்கு சீல் வைக்கப்பட்டது. இதனால் சீல் வைக்கப்பட்ட கட்டடங்களின் எண்ணிக்கை 59 ஆக உயர்ந்தது.
மேலும் விதிமுறை மீறிய கட்டடங்களுக்கு சீல் வைக்கும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

-ச.ஜெ.ரவி