Published:Updated:

சாத்தூர் பகுதியில் மத்திய வறட்சி குழு ஆய்வு!

சாத்தூர் பகுதியில் மத்திய வறட்சி குழு ஆய்வு!
சாத்தூர் பகுதியில் மத்திய வறட்சி குழு ஆய்வு!

விருதுநகர்: சாத்தூர் பகுதியில் இன்று இரண்டு கிராமங்களில் வறட்சி குறித்து ஆய்வு செய்த மத்தியக்குழுவினர், 100 நாள் வேலை திட்டத்தில் சராசரியாக 70 நாள்தான் வேலை நடக்கிறது என கவலை வெளியிட்டனர்.

தமிழகத்தின் வறட்சி நிலைமை குறித்து மத்திய அரசின் சிறு வேளாண் வர்த்தக கூட்டமைப்பின் நிர்வாக இயக்குனர் பிரவேஷ் சர்மா தலைமையில் அதிகாரிகள் குழு பல்வேறு மாவட்டங்களில் வறட்சி நிலைமை குறித்து ஆய்வு செய்து வருகின்றனர். இன்று காலை தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி பகுதியில் வறட்சியை பார்வையிட்ட அவர்கள், பிறகு விருதுநகர் மாவட்டத்தில் சாத்தூர் பகுதியில் நல்லி, பெத்துரெட்டியாபட்டி பகுதியில் வறட்சி உள்பட பல விசயங்களை ஆய்வு செய்தனர்.

சாத்தூர் பகுதியில் மத்திய வறட்சி குழு ஆய்வு!

பெத்து ரெட்டியபட்டி பகுதியில் 100 நாள் வேலை திட்டத்தில் ஈடுபடும் கிராம மக்கள் ஒரு நாளைக்கு 140 ரூபாய்தான் சம்பளம் கொடுக்கிறார்கள். இது போதாது சம்பளத்தை உயர்த்த வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர். உடனே மத்திய குழுவின் தலைவர் பிரவேஷ் சர்மா, "கிராம மக்களிடம் தேசிய அளவில் 100 நாள் வேலை திட்டத்தில் சராசரியாக 70 நாட்கள்தான் வேலை பார்க்கின்றனர். முதலில் 100 நாளும் வேலை செய்யுங்கள். பிறகு சம்பள உயர்வு பற்றி முடிவு செய்யலாம்" என்றனர்.

##~~##
பிறகு கால் நடைகளுக்கு தீவனம் கிடைக்கிறதா, மகளிர் சுய உதவிக்குழுக்கள் கடனை ஒழுங்காக கட்டுகிறார்களா என்று ஆய்வு செய்தனர். அதனைத் தொடர்ந்து விருதுநகர் கலெக்டர் அலுவலகத்தில் மதிய உணவை முடித்து விட்டு மதுரை பகுதியில் வறட்சியை பார்வையிட சென்றனர்.
- எம்.கார்த்தி
படங்கள்:
ஆர்.எம்.முத்துராஜ்