Published:Updated:

நோ நான் வெஜ், ஒன்லி வெஜிடேரியன்: மத்திய வறட்சி குழு அதிகாரிகள்

நோ நான் வெஜ், ஒன்லி வெஜிடேரியன்: மத்திய வறட்சி குழு அதிகாரிகள்
நோ நான் வெஜ், ஒன்லி வெஜிடேரியன்: மத்திய வறட்சி குழு அதிகாரிகள்

விருதுநகர்: தென் மாவட்டங்களில் வறட்சியை ஆய்வு செய்த பிரவேஷ் சர்மா தலைமையிலான மத்திய அரசின் அதிகாரிகள் குழு இன்று கோவில்பட்டி, சாத்தூர், பகுதிகளில் வறட்சியை ஆய்வு செய்தது. ஆய்வுக்கு பிறகு விருதுநகரில் மதிய சாப்பாட்டை முடித்து விட்டு பிறகு மதுரைக்கு செல்ல பயண திட்டத்தை தயாரித்திருந்தனர்.

விருதுநகர் கலெக்டர் அலுவலக சர்க்யூட் அவுஸ்சில் மதிய சாப்பாட்டுக்கு அதிகாரிகள் ஏற்பாடு செய்திருந்தனர். மதிய சாப்பாட்டுக்கு என்ன மெனுவை ஏற்பாடு செய்ய வேண்டும் என்பது தொடர்பாக விருதுநகர் வருவாய்த்துறை அதிகாரிகள் மத்திய அரசு வறட்சி குழு அதிகாரிகளிடம் கேட்டனர்.
 

நோ நான் வெஜ், ஒன்லி வெஜிடேரியன்: மத்திய வறட்சி குழு அதிகாரிகள்

அப்போது அக்னி நட்சத்திர வெயில் கொளுத்துவதால் நான் வெஜ் சாப்பாடு வேண்டாம். ஒன்லி வெஜிடேரியன் சாப்பாடு ஏற்பாடு செய்தால் போதும் என்று கூறி விட்டனர். இதையடுத்து மத்திய அரசின் வறட்சி குழு அதிகாரிகளுக்கு ஸ்பெசலாக சிவகாசியில் பெல் ஹோட்டலில் இருந்து வெஜிடேரியன் சாப்பாடு வகைகள் தயார் செய்து மதிய விருந்து அளித்தனர்.

மத்திய அரசு வறட்சி குழுவில் வட நாட்டு ஐஏஎஸ் அதிகாரிகள் அதிகம் இடம் பெற்றிருந்ததால் வட நாட்டு சைவ சாப்பாடு வகைகளான சப்பாத்தி, நான், சாம்பார், சென்னா, பன்னீர் டிக்கா, ஜாங்கிரி, குலோப்ஜாமூன், ஐஸ்கிரீம் என்று 20 வகையான உணவு பொருள்கள் அந்த மெனுவில் இடம் பிடித்திருந்தன.

விருதுநகரில் மதிய விருந்தை ருசித்த மத்திய வறட்சி குழு அதிகாரிகள், "பேஸ்...பேஸ்.. சாப்பாட்டை நல்லா ரெடி பண்ணியிருக்கீங்க!" என்று விருதுநகர் அதிகாரிகளை பாராட்டி விட்டு சென்றார்களாம்.


- எம்.கார்த்தி
படம்:
ஆர்.எம்.முத்துராஜ்