Published:Updated:

பிளஸ் 2 தேர்வில் நாமக்கல் பள்ளி மாணவர்கள் ஜெயசூர்யா, அபினேஷ் முதலிடம்

பிளஸ் 2 தேர்வில் நாமக்கல் பள்ளி மாணவர்கள் ஜெயசூர்யா, அபினேஷ் முதலிடம்
பிளஸ் 2 தேர்வில் நாமக்கல் பள்ளி மாணவர்கள் ஜெயசூர்யா, அபினேஷ் முதலிடம்

சென்னை: பிளஸ் 2 தேர்வில் நாமக்கல் மாணவர்கள் ஜெயசூர்யா, அபினேஷ் ஆகியோர் தலா 1189 மதிப்பெண்கள் எடுத்து மாநிலத்தி்ல் முதலிடத்தை பிடித்துள்ளனர்.

தமிழகம் முழுவதும் இன்று காலை 10 மணிக்கு பிளஸ்2 தேர்வுகள் முடிவுகள் இன்று வெளியிடப்பட்டது. இதனை அரசு தேர்வுகள் இயக்குனர் வசுந்தராதேவி வெளியிட்டுள்ளார்.

நாமக்கல் வித்யவிகாஸ் பள்ளியை சேர்ந்த மாணவர் ஜெயசூர்யா 1200க்கு 1189 மதிப்பெண்களும், இதே போல் நாமக்கல் கிரீன் பார்க் பள்ளி மாணவன் அபினேஷ்

• 1189 மதிப்பெண்கள் பெற்று மாநிலத்தில் முதலிடத்தை பிடித்துள்ளனர்.

##~~##
முதல் இடத்தைப் போலவே மாநிலத்தில் இரண்டாம் இடத்தை இரண்டு மாணவர்கள் பெற்றுள்ளனர். ஓசூர் ஸ்ரீவிஜய் வித் பள்ளி மாணவி அகல்யா, நாமக்கல் வித்யா விகாஸ் பள்ளி மாணவர் பழனிராஜ் ஆகியோர் 1188 மதிப்பெண்கள் எடுத்து 2வது இடத்தை பிடித்துள்ளனர்.
பிளஸ் 2 தேர்வில் நாமக்கல் பள்ளி மாணவர்கள் ஜெயசூர்யா, அபினேஷ் முதலிடம்
9 பேருக்கு மூன்றாம் இடம்...
* ராஜேஸ்வரி,
சி.இ.ஓ.ஏ., மெட்ரிக் பள்ளி கோசாகுளம், மேலூர், மதுரை
* கலைவாணி
குறிஞ்சி மெட்ரிக் பள்ளி, நாமக்கல்
* விஷ்ணுவர்த்தன்
கிரீன் பார்க் மெட்ரிக் பள்ளி, நாமக்கல்
* கண்மணி
கிரீன் பார்க் மெட்ரிக் பள்ளி, நாமக்கல்
* மனோதினி,
கிரீன் பார்க் மெட்ரிக் பள்ளி, நாமக்கல்
* ரவீனா,
எஸ்.வி. மந்திர் மெட்ரிக் பள்ளி, ஊத்தங்கரை, கிருஷ்ணகிரி
* நிவேதிதா,
ஜியோன் மெட்ரிக் பள்ளி, சேலையூர், செங்கல்பட்டு
* பூஜா எஸ்.சங்கர்,
சுவாமி எம். மெட்ரிக் பள்ளி, போரூர், பொன்னேரி
*முத்து மணிகண்டன்,
நாசரேத் மெட்ரிக் பள்ளி, ஆவடி, திருவள்ளூர்