Published:Updated:

பிளஸ் 2 தேர்வு: புதுச்சேரியில் வேணு சீனிவாசன் (1187) முதலிடம்

பிளஸ் 2 தேர்வு: புதுச்சேரியில் வேணு சீனிவாசன் (1187) முதலிடம்
பிளஸ் 2 தேர்வு: புதுச்சேரியில் வேணு சீனிவாசன் (1187) முதலிடம்
பிளஸ் 2 தேர்வு: புதுச்சேரியில் வேணு சீனிவாசன் (1187) முதலிடம்

புதுச்சேரி: புதுச்சேரியில் பிளஸ் 2 தேர்வில் பெத்தி சேமினர் பள்ளி மாணவர் வேணு சீனிவாசன் 1187 மதிப்பெண்கள் பெற்று முதலிடத்தை பிடித்துள்ளார்.

தமிழகத்தி்ல் இன்று பிளஸ் 2 தேர்வு முடிவு காலை 10 மணிக்கு வெளியிடப்பட்டது. இதேபோல் புதுச்சேரியிலும் பிளஸ் 2 தேர்வு முடிவுகள் வெளியானது.

இதில், பெத்தி சேமினர் பள்ளி மாணவர் வேணு சீனிவாசன் 1200க்கு 1187 மதிப்பெண்கள் எடுத்து மாநிலத்திலேயே முதலிடத்தை பிடித்துள்ளார்.

அமலோர் பவம் பள்ளி மாணவர் ஸ்ரீதர், 1183 மதிப்பெண்கள் பெற்று 2வது இடத்தை பிடித்துள்ளார்.

##~~##
3 பேர் 1182 மதிப்பெண்கள் பெற்று 3வது இடத்தை பிடித்துள்ளனர். பெத்தி சேமினர் பள்ளி மாணவர் சிவநேசன், ஆதித்யா வித்யாஷ்ரமம் பள்ளி மாணவி ராஜேஸ்வரி, விவேகானந்தா பள்ளி மாணவி தக் ஷிதா ஆகியோர் 3வது இடத்தை பிடித்துள்ளனர்.
ஆனால், மாநிலத்தில் எத்தனை பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர், தேர்ச்சி சதவீதம்  எவ்வளவு உள்பட மற்ற விவரங்களை மாலை 5 மணிக்கு முதல்வர் ரெங்கசாமி தெரிவிப்பார் என்று கல்வித்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
அறவாழி