Published:Updated:

செயல்வழியில் கற்றதால் சிறப்பிடம்: தமிழில் மாநில முதலிடம் பிடித்த சிந்துஜா!

செயல்வழியில் கற்றதால் சிறப்பிடம்: தமிழில் மாநில முதலிடம் பிடித்த சிந்துஜா!
செயல்வழியில் கற்றதால் சிறப்பிடம்: தமிழில் மாநில முதலிடம் பிடித்த சிந்துஜா!
செயல்வழியில் கற்றதால் சிறப்பிடம்: தமிழில் மாநில முதலிடம் பிடித்த சிந்துஜா!

விழுப்புரம்: செயல்வழியில் மகிழ்ச்சியுடன் படித்ததால், மாநில அளவில் தமிழ்ப் பாடத்தில் சிறப்பிடம் பெற முடிந்தது என்று மாணவி சிந்துஜா கூறினார்.

பிளஸ் 2 தேர்வில் மாணவி சிந்துஜா தமிழ்ப் பாடத்தில் 200-க்கு 199 மதிப்பெண்கள் பெற்று மாநில அளவில் முதலிடம் பெற்றார். இவர், விழுப்புரம் மாவட்டம் கள்ளக்குறிச்சியில் உள்ள பாரதி மேட்ரிக் மேல்நிலை பள்ளியைச் சேர்ந்தவர்.

தன் வெற்றியின் ரகசியத்தை பகிர்ந்துகொண்ட சிந்துஜா, "ஆரம்பத்தில் தமிழ்ப் பாடத்தில் எனக்கு ஆர்வம் இல்லை. ஆனால், எங்கள் பள்ளியின் தமிழாசிரியர் இதயராஜ்தான் தமிழ்ப் பாடத்தின் முக்கியத்துவத்தை செல்லி, அதன்மீது ஆர்வத்தைத் தூண்டினார்.

தமிழில் மனப்பட பகுதியில் உள்ள பாடல்களை, வகுப்பில் பாட்டு போல பாடிதான் படிப்போம். கட்டுரை பகுதிகளை, கதை போல செல்லிப் படிப்போம். இவ்வாறு செயல்வழியில் கற்றதால், எதுவும் மறக்காதபடி மனதில் சுலபமாக பதிந்துவிட்டது.

பாடபுத்தகத்தில் உள்ளதை மட்டும் படிக்காமல், அதன் பெருளை முழுமையாக புரிந்துகொண்டு படித்தேன். படித்தவற்றை தினமும் எழுதிப் பார்ப்ப்பேன். ஒவ்வொரு கட்டுரைகளை 14 முதல் 15 பக்கங்களுக்கு கதை போல எழுதுவேன். கேள்வி பதில்களில்தான் முக்கியச் சொற்களைப் பார்ப்பார்கள். கட்டுரைகளில் அப்படி பார்க்க மாட்டார்கள். தலைப்பும், முன்னுரையும் நன்றாக வைத்திவிட்டால், முழு மதிப்பொண்களையும் அள்ளி விடலாம். 

தமிழ் இரண்டாம் தாள் இலக்கண பகுதி என்பதால், எழுத்துப் பிழை வராமல் முடிந்தவரை பார்த்து கொண்டேன். எழுதி எழுதி எழுத்துப் பிழையை திருத்திகொண்டேன்" என்றார் சிந்துஜா.