சாதி ஆணவத்தால் உடுமலை சங்கர் வெட்டிப் படுகொலை செய்யப்பட்ட பிறகு, சாதிய ஒடுக்குமுறைகளுக்கு எதிராகக் குரல் கொடுத்துவந்த சங்கரின் மனைவி கவுசல்யா, கடந்த டிசம்பர் 9-ம் தேதி, ‘நிமிர்வு கலையகம் பறை இசைக்குழு’வின் ஒருங்கிணைப்பாளரான சக்தியை மறுமணம் செய்துகொண்டார். திராவிடர் விடுதலைக் கழகத் தலைவர் கொளத்தூர் மணி, தந்தை பெரியார் திராவிடர் கழகப் பொதுச்செயலாளர் கு.ராமகிருட்டிணன், எவிடன்ஸ் கதிர், விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் துணைப் பொதுச்செயலாளர் வன்னிஅரசு ஆகியோர் முன்னின்று இந்தத் திருமணத்தை நடத்திவைத்தார்கள். திருமணம் முடிந்த சில மணி நேரத்தில், ‘இவர் ஏற்கெனவே பல பெண்களை ஏமாற்றியிருக்கிறார்’ என்று சக்தி மீதும், ‘அந்த உண்மைகள் தெரிந்தும் பாதிக்கப்பட்ட பெண்களின் பக்கம் நிற்காமல் சக்தியைத் திருமணம் செய்துகொள்கிறார்’ என்று கவுசல்யா மீதும் சமூக வலைதளங்களில் குற்றச்சாட்டுகள் எழுந்தன.

இதுகுறித்து 19.12.2018 தேதியிட்ட ஜூனியர் விகடன் இதழில் எழுதியிருந்தோம். அதைத்தொடர்ந்து, பாதிக்கப்பட்ட பெண்கள் மற்றும் கவுசல்யா-சக்தி ஆகியோரிடமும் தமிழ்த் தேசிய விடுதலை இயக்கத்தின் தலைமைக்குழு உறுப்பினர் தியாகு, திராவிடர்-விடுதலைக் கழகத் தலைவர் கொளத்தூர் மணி ஆகிய இருவரும் விசாரணை நடத்தி, அதன் முடிவாகக் கூட்டறிக்கை வெளியிட்டுள்ளார்கள். அந்த அறிக்கைதான் இப்போது அதிர வைத்திருக்கிறது.

அந்த அறிக்கையின் சுருக்கம் இது. “ஒரு பெண்ணைக் காதலித்துவந்த சக்தி அவரைக் கைவிட்டு கவுசல்யாவை மணந்துகொண்டார் என்பது முதல் குற்றச்சாட்டு. இதில், பாதிக்கப்பட்ட அந்தப் பெண்ணுக்கு உடலளவிலும், மனதளவிலும் கடுமையான மனஉளைச்சல் தந்திருப்பதும் குற்றம். சொந்த வாழ்வில் ஆணவக் கொலையால் பாதிப்புற்ற கவுசல்யா, நீதிக்காக நடத்திய போராட்டத்தையும், ஆணவக் கொலைகளுக்கு எதிரான இயக்கத்தில் அவர் வகித்த பங்கையும் சமூக நீதி ஆற்றல்களுடன் சேர்ந்து நாமும் வரவேற்றோம். சங்கர் மீதான காதலையே நினைத்துக்கொண்டு கவுசல்யா காலமெல்லாம் கைம்பெண்ணாகவே வாழ வேண்டும் என்ற பத்தாம்பசலி நிலைப்பாட்டிலும் எமக்கு உடன்பாடில்லை. அவர் மீண்டும் காதல் மணம் புரிவது வரவேற்கத்தக்கது என்ற கருத்திலும் மாறுபாடு இல்லை. ஆனால், சக்தி மீது கொண்ட காதலும், அவரை மணந்துகொள்ள வேண்டும் என்ற நோக்கமும் கருதி சக்தியின் செயலைக் கண்டிக்கத் தவறியது கவுசல்யாவின் பிழை.

எம்மிடம் புலனாய்வுப் பொறிமுறையோ, நீதி நிலைநாட்டுவதற்கான பொறிமுறையோ முடிவுகளைச் செயலாக்குவதற்கான சட்ட வலிமையோ இல்லாத நிலையிலும், தமிழ்ச் சமூகம் தந்திருப்பதாக நாங்கள் நம்பும் அற வலிமையையும் அனைத்துத் தரப்பினரின் நம்பிக்கையையும் துணைகொண்டு, இதுதொடர்புடைய அனைவரும் இடம்பெற்ற பொது அவையிலும் கலந்தாய்வு செய்தோம். சான்றளிக்க வேண்டிய சிலரிடம் தொலைபேசி வழியாகவும் உண்மையை அறிய முயன்றோம். இந்த விசாரணையில் அடைந்த முடிவுகளையும் தீர்ப்பையும் பொது வெளியில் பணிந்தளிக்கிறோம். இந்த விவகாரத்தில் சக்தியால் பாதிக்கப்பட்ட ஒரு பெண்ணுக்கு மோசமான அநீதி இழைக்கப்பட்டுள்ளது. அநீதிக்குப் பொறுப்புக்கூற வேண்டியவர் சக்தி. அந்தப் பெண்ணும் சரி, சக்தி - கவுசல்யாவும் சரி, எங்களிடம் தந்த விளக்கங்களில் அடிப்படையான முரண்பாடுகள் ஏதுமில்லை. பொது அவையிலும் அந்தப் பெண் தொடர்பாகத் தன் மீதான குற்றச்சாட்டை சக்தி ஒப்புக்கொண்டார். கவுசல்யாவும் தன் பிழையைப் புரிந்து ஒப்புக்கொண்டார்” என்று அறிக்கையில் குறிப்பிட்டுள்ளவர்கள், ஒரு தீர்வாக ஒரு விஷயத்தையும் சொல்லியிருக்கிறார்கள்.

“சக்தி தன் குற்றங்களுக்காகப் பொது அவையில் மன்னிப்புக் கோர வேண்டும். கவுசல்யாவும் பொது அவையில் வருத்தம் தெரிவிக்க வேண்டும். (இது அப்போதே நடந்து முடிந்தது), சக்தி, ‘நிமிர்வு’ கலையகத்திலிருந்து வெளியேற வேண்டும். இன்றிலிருந்து ஆறுமாத காலம் சக்தி எந்தப் பொது நிகழ்ச்சியிலும் பறை இசைக்கக் கூடாது. இழப்பீடாகப் பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு அவர் ஆறுமாத காலத்துக்குள் மூன்று லட்சம் ரூபாய் செலுத்த வேண்டும்” என்று குறிப்பிட்டுள்ளார்கள்.

இந்த விஷயத்தில் கொளத்தூர் மணி மற்றும் அவர் சார்ந்தோர் மேற்கொண்ட இந்த முயற்சிகளை ஒரு சாரார் வரவேற்றாலும், சிவில் சட்டம் நடைமுறையில் உள்ள ஒரு நாட்டில், இதுபோன்று ஒரு தனிப்பட்ட அமைப்பு இந்த விஷயத்தை அணுக முடியுமா என்றும் வேறொரு சாரார் கேள்வி எழுப்புகின்றனர்.

இதுகுறித்து கொளத்தூர் மணியிடம் கேட்டோம். அவர், “எங்களுடைய அறிக்கை யிலேயே ‘எங்களுக்குச் சட்ட வலிமை இல்லை’ என்று சொல்லியிருக்கிறோம். பிறகு என்ன விளக்கம் கேட்கிறீர்கள்” என்பதுடன் முடித்துக்கொண்டார்.
தியாகுவிடம் கேட்டதற்கு, “இதுகுறித்து நான் எதுவும் பேச விரும்பவில்லை” என்றபடித் தொடர்பைத் துண்டித்துவிட்டார்.

ஆரம்பத்திலிருந்து கவுசல்யாவுக்கு எதிராக அறிக்கை வெளியிட்டு வரும் கொங்குநாடு மக்கள் தேசியக் கட்சித் தலைவர் ஈஸ்வரனிடம் பேசியபோது, “கொளத்தூர் மணியும், தியாகுவும் இப்போதாவது உண்மையைப் புரிந்து கொண்டார்களே... அவர்களின் ஆதங்கத்தைத்தான் இந்த அறிக்கை காட்டுகிறது. இதை நான் வரவேற்கிறேன்” என்றார்.

- எம்.புண்ணியமூர்த்தி