Published:Updated:

சனீஸ்வரர் சிலை மீது தேங்காய் உடைத்த பக்தர் கம்பி எண்ணுகிறார்

சனீஸ்வரர் சிலை மீது தேங்காய் உடைத்த பக்தர் கம்பி எண்ணுகிறார்
சனீஸ்வரர் சிலை மீது தேங்காய் உடைத்த பக்தர் கம்பி எண்ணுகிறார்
சனீஸ்வரர் சிலை மீது தேங்காய் உடைத்த பக்தர் கம்பி எண்ணுகிறார்

குச்சனூர்: ஏழரை வருடங்களாக தன்னை பிரியமாக(!) பிடித்து வைத்துக் கொண்டு ஆட்டிப் படைத்ததாக சொல்லி சனீஸ்வர பகவான் தலையில் தேய்காயை வீசி எறிந்து ஆத்திரத்தை கொட்டி இருக்கிறார் ஒரு அதீத பக்திகமான்!

தேனி மாவட்டம் குச்சனூரில் அருள்மிகு சனீஸ்வர பகவான் திருக்கோயில் உள்ளது.  ராகு, கேது, சனிஸ்வரன் மூவரும் ஒரே இடத்தில் கோயில் கொண்டிருப்பது இத் திருத்தலத்தின் சிறப்பு. இது திருநள்ளாற்றில் உள்ள சனீஸ்வரர் கோயிலுக்கு நிகரான திருத்தலம் என்பது மக்களின் நம்பிக்கை.

இங்கே தினமும் பொதுமக்கள் மட்டுமல்லாமல் பல வி.வி.ஐ.பி.க்கள் கூட வந்து தரிசித்து செல்வது வழக்கம். உள்துறை அமைச்சராக இருந்தபோது, ஸ்பெக்ட்ரம், மாவோயிஸ்ட்கள் உள்ளிட்ட பிரச்னைகளால் நிம்மதியை தொலைத்துவிட்டு நின்ற ப.சிதம்பரம் குடும்பத்தோடு குச்சனூர் வந்து சென்றார். 2010 ஆம் ஆண்டு இலங்கை அதிபர் ராஜபக்சே தனது மனைவி மற்றும் உறவினர்களுடன் இங்கு வந்து சுவாமி தரிசனம் செய்துவிட்டு சென்றுள்ளார்.

சனீஸ்வரர் சிலை மீது தேங்காய் உடைத்த பக்தர் கம்பி எண்ணுகிறார்

இந்தநிலையில், நேற்று மாலை, தேனி பங்களா மேடு பகுதியை சேர்ந்த சரவணன் என்பவர் இங்கே சாமி தரிசனம் செய்ய லேசான தள்ளாட்டத்துடன் வந்தார். தனக்கு ஏழரை சனி முடிவதால்  பரிகாரம் செய்ய வந்திருப்பதாக சொல்லி இருக்கிறார் சரவணன். கடந்த சில ஆண்டுகளாக சரவணனுக்கு சனீஸ்வர பகவா னால் ஏகப்பட்ட சிக்கலாம். வியாபாரம் மற்றும் குடும்பத்தில்  ஏகப்பட்ட சிக்கல்ளை சந்தித்திருக்கிறார். இதை யெல்லாம் அங்கிருந்தவர்களிடம் புலம்பல் கதையாக சொல்லிக் கொண்டு இருந்தவர், திடீரென பகவான் மீது கோபம் அடைந்து,  நேராக கருவறைக்கு அருகில் சென்று,  'என்னய பாடா படுத்தி எடுத்துட்டியேப்பா... உன் னால தானே இம்புட்டு கஷ்டமும். வியாபாரத்தையும் படுக்க வைச்சிட்டே! " என்று சொல்லிவிட்டு, கையில் இருந்த தேங்காயை  சனி பகவானை குறிவைத்து எறிந்துள்ளார்.

சனீஸ்வரர் சிலை மீது தேங்காய் உடைத்த பக்தர் கம்பி எண்ணுகிறார்

இதைப் பார்த்துவிட்டு பதறிப்போன கோயில் நிர்வாகத்தினர், சரவணன் அடுத்த ஆக் ஷனில் இறங்குவதற்குள், அவரை பிடித்து போலீஸில் ஒப்படைத்திருக்கிறார்கள். சனீஸ்வர பகவானை அவமதிப்பு செய்ததாக சரவணன் மீது வழக்குப் பதிவு செய்த சின்னமனூர் போலீஸார், அவரை சிறைக்கும் அனுப்பி இருக்கிறார்கள்.

சனீஸ்வர பகவான் சரவணனை விட்டுட்டாருன்னு யாரு சொன்னது!

 

 

##~~##

 
சண். சரவணகுமார்

படங்கள்:
வீ.சக்தி அருணகிரி