Published:Updated:

பானுப்ரியாவிடமிருந்து என் மகளை மீட்டுத் தாருங்கள்! - ஆந்திர போலீஸில் தாய் புகார்

பானுப்ரியாவிடமிருந்து என் மகளை மீட்டுத் தாருங்கள்! - ஆந்திர போலீஸில் தாய் புகார்
பானுப்ரியாவிடமிருந்து என் மகளை மீட்டுத் தாருங்கள்! - ஆந்திர போலீஸில் தாய் புகார்

ஆந்திராவைச் சேர்ந்த பிரபாவதி என்ற பெண், நடிகை பானுப்ரியா மீது காவல் நிலையத்தில் புகார் தெரிவித்துள்ளார். வீட்டு வேலைக்காகத் தன் மகளை அழைத்துச்சென்ற பானுப்ரியா, மகளைக் கொடுமை படுத்துவதாகக் கூறியுள்ளார். கிழக்குக் கோதாவரி மாவட்டத்தில் உள்ள சமால்கோட்டா நகர் காவல் நிலையத்தில்தான் வழக்கு பதிவாகியுள்ளது.

பிரபாவதி தன் மனுவில், ‘கடந்த ஒன்றரை வருடங்களுக்கு முன்பு வீட்டு வேலைக்காக என் மகளை நடிகை பானுப்ரியா சென்னை அழைத்துச் சென்றார். அவர் அழைத்துச் செல்வதற்கு முன்பு 10,000 ரூபாய் சம்பளம் வழங்குவதாக உறுதி அளித்தார். ஆனால், இதுவரை ஒரு மாதம்கூட சம்பளம் வழங்கவில்லை. என் மகளை பார்ப்பதற்காகக் கடந்த 19-ம் தேதி நான் சென்னை சென்றிருந்தேன். ஆனால், அவர்கள் என் மகளைப் பார்க்கவிடவில்லை. என்னிடம் மிகவும் கடுமையாக நடந்துகொண்டார். மேலும், என் மகள் அவர் வீட்டில் திருடியதாகக்  காவல் நிலையத்தில் பொய் புகார் அளிப்பேன் எனவும் 10 லட்சம் ரூபாய் கேட்டு என்னை மிரட்டினார். அவரிடமிருந்து என் மகளை மீட்டுத்தாருங்கள்’ என அதில் குறிப்பிட்டுள்ளார்.

ஆனால், இந்தப் புகாரை நடிகை பானுப்ரியா மறுத்துள்ளார். 16 வயதான ஒரு சிறுமி தன் வீட்டில் கடந்த ஒரு வருடமாக வேலை செய்வதாகவும் அவர் தன் வீட்டிலிருந்து விலை உயர்ந்த நகைகள் மற்றும் பொருள்களைத் திருடி அதை தன் வீட்டில் வைத்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார். மேலும், அந்தப் பொருள்களைத் திரும்பக் கொண்டுவரும்படி சிறுமியின் தாயிடம் கேட்டபோது அவர் ஐ.பேட், கேமரா மற்றும் வாட்ச் ஆகியவற்றை மட்டுமே கொண்டுவந்தார். மற்ற பொருள்களைக் கேட்டதற்குத்தான் பிரபாவதி தன் மீது பொய் புகார் தெரிவித்துள்ளதாகக் கூறியுள்ளார்.

நடிகை பானுப்ரியா, தமிழ், தெலுங்கு, கன்னடம், இந்தி, மலையாளம் போன்ற மொழிகளில் இதுவரை 100-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார்.