Published:Updated:

தீவிர சிகிச்சை பிரிவில் மத்திய அரசு: வெங்கையா நாயுடு கடும் தாக்கு

தீவிர சிகிச்சை பிரிவில் மத்திய அரசு: வெங்கையா நாயுடு கடும் தாக்கு
தீவிர சிகிச்சை பிரிவில் மத்திய அரசு: வெங்கையா நாயுடு கடும் தாக்கு
தீவிர சிகிச்சை பிரிவில் மத்திய அரசு: வெங்கையா நாயுடு கடும் தாக்கு

பெங்களூர்: பிரதமர் நாட்டுக்கு சுமையாகிவிட்டார் என்று கூறியுள்ள பா.ஜ.க. மூத்த தலைவர் வெங்கையா நாயுடு, மத்திய அரசு தீவிர சிகிச்சை பிரிவில் உள்ளது என்று கடுமையாக விமர்சித்துள்ளார்.

பெங்களூரில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய அவர், பிரதமர் மன்மோகன் சிங் நாட்டுக்கு பெரிய சுமையாகி விட்டார் என்றும் மத்தியில் ஆளும் ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு தீவிர சிகிச்சை பிரிவிலே உள்ளது என்றும் விமர்சித்தார்.

சி.பி.ஐ.யை கொண்டே ஆட்சி நடைபெற்று வருகிறது என்று  குற்றம்சாட்டிய நாயுடு, உயிர் காக்கும் கருவிகள் துணையுடனே அரசு செயல்பட்டு வருகிறது என்றும் மற்றொரு நாட்டின் ஊடுருவலை கூட தடுக்க முடியாத அரசாக உள்ளது என்றும் கூறினார்.

ஊழலுக்காக ஊழல்வாதிகளால் அமைக்கப்பட்ட அரசு புகார் தெரிவித்த வெங்கையா, ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசில் விவசாயிகளின் தற்கொலை அதிகரித்து விட்டது என்று கூறினார்.

##~~##
ஐக்கிய முற்போக்கு கூட்டணியில் ஊழல்கள் நிறைந்துள்ளது என்றும் மத்திய அரசு சட்டப்பூர்வ அரசு அமைப்புகளை பலவீனப்படுத்த முயற்சி செய்கிறது என்றும் அவர் குற்றம்சாட்டினார்.
ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் நாட்டின் வளர்ச்சி 5 சதவீதம் குறைந்துள்ளது என்று தெரிவித்த வெங்கையா நாயுடு, மத்தியில் பா.ஜ.க. ஆட்சியின் போது 2004ம் ஆண்டு நாட்டின் வளர்ச்சி 8.2 சதவீதமாக இருந்தது என்றார்.