Published:Updated:

சென்னையில் சூறை காற்றுடன் மழை: கடலூர், நாகையில் புயல் கூண்டு ஏற்றம்

சென்னையில் சூறை காற்றுடன் மழை: கடலூர், நாகையில் புயல் கூண்டு ஏற்றம்
சென்னையில் சூறை காற்றுடன் மழை: கடலூர், நாகையில் புயல் கூண்டு ஏற்றம்
சென்னையில் சூறை காற்றுடன் மழை: கடலூர், நாகையில் புயல் கூண்டு ஏற்றம்

சென்னை: சென்னை, புறநகர் பகுதியில் நள்ளிரவில் சூறை காற்றுடன் மழை பெய்தது. இந்த சூறை காற்றால் தூக்கத்தில் விழித்தெழுந்த மக்கள் அச்சம் அடைந்தனர்.

தென்கிழக்கு வங்கக்கடலில் கடந்த வாரம் குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை உருவானது. பின்னர் அது வலுப்பெற்று, புயலாக மாறியது.

"மகாசேன்" என்று பெயர் வைக்கப்பட்டுள்ள, இந்த புயல் வரும் 16 அல்லது 17 தேதிகளில் வங்கதேசம், மியான்மர் இடையே கரையைக் கடக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

புயல் காரணமாக சென்னை, கடலூர் ஆகிய துறைமுகத்தில் 5ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டும்,  நாகை, புதுச்சேரி, பாம்பன் துறைமுகத்திலும் 2ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டும் ஏற்றப்பட்டுள்ளது.

இந்த நிலையில் சென்னை, புறநகர் பகுதியில் நள்ளிரவில் சூறை காற்றுடன் மழை பெய்தது. வடபழனி, ஆவடி, தி.நகர், கிண்டி, மயிலாப்பூர், சாந்தோம், அம்பத்தூர் ஆகிய இடங்களில் மழை காரணமாக , சாலைகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது.

##~~##
திருவள்ளூர் மாவட்டத்தில் நேற்றிரவு பலத்த காற்றுடன் மழை பெய்தது. நள்ளிரவு 12 மணி அளவில் சூறை காற்றுடன் மழை பெய்ததால் மக்கள் அச்சத்துடன் எழுந்தனர். இதனால் பல பேரின தூக்கம் கலைந்தது. காலை வரை தூறலுடன் மழை பெய்து வருகிறது.
மகாசேன் புயல் காரணமாக தமிழகம் மற்றும் புதுச்சேரியில் இடியுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
மீனவர்கள் யாரும் கடலுக்கு செல்ல வேண்டும் என்றும் வானிலை ஆய்வு மையம் கேட்டுக் கொண்டுள்ளது.